Aran Sei

அதானி நிறுவனத்தின் பங்குகள் 18 % சரிவு – பங்குதார நிறுவனங்களின் கணக்குகளை முடக்கி என்.எஸ்.டி.எல் உத்தரவு

தானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மூன்று வெளிநாட்டு பங்குதார நிறுவனங்களின் கணக்குகளை நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் முடக்கியதால், அதானி நிறுவனத்தின் பங்குகள் 5 முதல் 18 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பன்மடங்கு விலையில் அதானி, டாடா நிறுவனங்களிடம் மின்சக்தியை கொள்முதல் செய்யும் குஜராத்: காங்கிரஸின் கேள்விக்கு குஜராத் அரசு பதில்

அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் தேசிய பங்கு வர்த்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பெருநிறுவனங்களில் இடம்பெற்றுள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய நிறுவனத்தின் பங்குகள் 15 விழுக்காடு அதிகமாக சரிந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிராஸ்டா பண்ட், ஏ.பி.எம்.எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகியவை நிறுவனங்களின் கணக்குகளை நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் முடக்கியுள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் சாட்டப்பட்ட மியான்மர் இராணுவ நிறுவனத்துக்கு அதானி வழங்கிய நிதி – புகைப்படங்கள், வீடியோ ஆதாரம்

இதுகுறித்து, நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் இணையத்தில், எவ்வித காரணங்களும் தெரிவிக்காமல், இந்த கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி நிறுவனங்கள் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் போதிய தகவலைத் தெரிவிக்காததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளதாகவும் தி இந்து செய்தி குறிப்பிடுகிறது.

காட்டுப்பள்ளிக்குப்பத்தை மீன்பிடி தடை பகுதியாக அறிவிக்கக் கோரிய அதானி – தமிழக மீனவர்கள் எதிர்ப்பு

இந்த நிதி நிறுவனங்கள் மொத்தமாக ₹435 மில்லியன் நிதியை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் எகனாமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்