Aran Sei

உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி: ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் நிறுவனம் தகவல்

credits : ndlf

ர்வதேச அளவில் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அம்பானியை பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் 10 ஆவது இடத்தை கௌதம் அதானி பிடித்துள்ளார் என்று ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 1830% அதிகரித்த அதானியின் சொத்துகள் – ஹுருன் ஆய்வு நிறுவனம் தகவல்

இந்திய ரூபாய் மதிப்பில் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 7 லட்சத்து 60 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.

முகேஷ் அம்பானி 99 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 11 ஆவது இடத்தில் உள்ளார்.அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் என்பது சர்வதேச அளவில் உள்ள பணக்காரர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களின் சொத்து மதிப்புகளைக் கணக்கிடும் நிறுவனம் ஆகும்.

கொரோனா காலத்தில் உலக பணக்காரர்களை முந்திய அதானி – ப்ளூம்பெர்க் நிறுவனம் தகவல்

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் புள்ளி விவரங்களின் படி, டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் 273 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் 188 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2 ஆவது இடத்தில் உள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்