கேரள அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தை அதானி குழுமத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
6 விமான நிலையங்களைத் தனியார்மயப்படுத்தும் திட்டத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) அறிவித்தது. இதில் அதானி குழுமம் அதிகபட்ச தொகையைக் கோரியதை அடுத்து ஏஏஐயிற்கும் அதானி குழுமத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தத்தின்படி, லக்னோ, மங்களூரு, அகமதாபாத், கௌஹாத்தி விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருவனந்தபுரம் விமான நிலையமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
‘டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றம் உலக மக்களின் சிந்தனையை தூண்டும்’ – அறிஞர் அண்ணா
இந்த விமான நிலையங்களின் நிர்வாகம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்தின் வசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அதானி குழுமத்திடம் வழங்கப்பட்டுள்ள லக்னோ, மங்களூரு, அகமதாபாத் ஆகிய மூன்று விமான நிலையத்தின் சொத்துகள் முறைகேடாக குறைவான விலையில் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய ஆணையத்தின் ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியிருந்தது.
இது தொடர்பாக, அக்டோபர் 2 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு அவர்கள் எழுதியிருந்த கடிதத்தில், “ரூ. 1300 கோடி என மதிப்பிடப்பட்ட சொத்துக்கள் ரூ. 500 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.” என தெரிவித்திருந்தனர்.
மேலும், அதானி குழுமத்திற்கு மேற்கொண்டு விமான நிலையங்களைக் குத்தகைக்கு அளிக்க வேண்டாம் என அவர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
கடன் மோசடி வழக்கு – பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி வீட்டிற்கு சீல்
திருவனந்தபுரம் மாவட்டத்தில் ரூ. 7525 கோடி மதிப்பில் விழிஞ்சியம் சர்வதேச துறைமுகத்தைத் கட்டி வரும் அதானி குழுமம், 89 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருவனந்தபுர விமான நிலையத்தை ஏலம் எடுத்துள்ளது.
ஏலத்தில் கேரள அரசுக்கு சொந்தமான கேரள மாநில தொழிற் வளர்ச்சி கழகம் மற்றும் ஜிஎம்ஆர் குழுமம் போட்டியிட்ட நிலையில் அதானி குழுமத்திடம் விமான நிலையம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தைத் தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரள அரசின் தீர்மானத்தை மீறி விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு வழங்க முடிவெடுத்த நிலையில், இந்த முடிவுக்கு எதிராக கேரள அரசு சார்பில் அம்மாநில நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
நல்ல இஸ்லாமியர், கெட்ட இஸ்லாமியர் – அக்பரை முன்வைத்து வலதுசாரிகள் கட்டமைக்கும் கருத்தியல்
1932 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு, 1991 ஆம் ஆண்டு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.