Aran Sei

மேற்கு வங்கத்தில் மூடிக்கிடந்த அரிசி பதப்படுத்தும் ஆலையை வாங்கிய அதானி குழுமம் – போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்

image credit : livemint.com

மேற்கு வங்க மாநில கிழக்கு பர்த்வானில் மூடிக்கிடந்த, பயன்பாட்டில் இல்லாத அரசி பதப்படுத்தும் ஆலையை அதானி குழுமம் வாங்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்க் ஆபத்து ஏற்படும் என சிபிஎம் ஆதரவு விவசாய அமைப்பான அகில் இந்திய கிசான் சபா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

அதானி குழுமம் மற்றும் வில்மர் குழமத்தின் கூட்டு நிறுவனமான அதானி விலமர் லிமிடெட் (ஏ.டபிள்யூ.எல்) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”பர்த்வானில் உள்ள மூடிய மற்றும் செயல்படாத அரிசி ஆலையை நாங்கள் வாங்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

அரசி பதப்படுத்தும் தொழிலில் ஒரு கார்பரேட் நிறுவனம் நுழைவது குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த அரிசி ஆலை அதிபர்கள், அவர்களது அச்சத்தை வெளிப்படுத்துயுள்ளனர்.

விருதுநகர்: கூட்டுப்பாலியல் செய்யப்பட்ட பட்டியலின பெண் – குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேர் கைது

அதானி குழுமத்தின் செயல்பாட்டால் விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள சிபிஎம் ஆதரவு விவசாய அமைப்பு, அதானி நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்களைத் தொடங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படும் பர்த்வானி ஜவ்கிராம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத அரிசி ஆலை ஒன்றை வாங்கிய அதானி குழமம், அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரிசி ஆலைக்கு அருகே சில ஏக்கர் நிலத்தை அதானி குழுமம் வாங்கியுள்ளது. அங்கு, ஒரு பெரிய சேமிப்பு கிடைங்கை அமைக்கத் திட்டமிட்டுள்ளது” என அந்த வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா கடிதம்

”பர்த்வானில் பயன்பாட்டில் இல்லாத 20 அரிசி ஆலைகள் குறித்து ஏ.டபிள்யூ.எல் தகவல்களை சேகரித்துள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற மேலும் பல ஆலைகளை அந்நிறுவனம் வாங்கலாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

”அரிசி ஆலைகள் என்றழைக்கப்படும் அரசி பதப்படுத்தும் ஆலைகள் பெரும்பாலும் சிறிய நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. அவர்கள் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து, அரிசியை உற்பத்தி செய்து வெளிசந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்” என ஒரு அரிசி ஆலை அதிபர் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் போன்ற பெரிய நிறுவனம், இந்த தொழிலில் நுழைவது, அதிக ஆலைகளை வாங்குவது, வர்த்தகத்தின் விதிகளையே மாற்றியமைக்கும் என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மம்தா பானர்ஜி நடத்திய தொழிலதிபர்களுடனான கூட்டத்தில், அதானியின் மகன் கரன் இடம்பெற்றிருந்ததை சுட்டிக்காட்டிய மேற்கு வங்க அரசின் மூத்த அதிகாரி, “அதானி குழுமம் மேற்கு வங்கத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கிறது. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் வருடாந்திர முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் அதானி குழுமம் முக்கிய பங்கு வகிக்கும்” என கூறியுள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

அரிசி பதப்படுத்தும் துறையில் ஏ.டபிள்யு.எல் நுழைவது, மேற்கு வங்கத்திற்கும் அரசி பதப்படுத்து தொழிலுக்கும் நல்லது என அந்த அரசு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

”இது எங்களுக்கு ஒரு அச்சுறுத்தல். இது போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான ஆலைகளை வாங்கினால் நாங்கள் போட்டியிட முடியாது. அவர்கள் விவசாயிகளுக்குப் பெரிய அளவிலான முன்பணத்தையும், அரிசி வாங்கும் வணிகர்கள் பணம் செலுத்துவதற்கு நீண்ட நேரத்தையும் அவர்களால் வழங்க முடியும். இதுகுறித்து எங்கள் சங்கத்தில் விவாதிப்போம்” என்று பர்த்வான் மாவட்ட அரிசி ஆலைகள் சங்கத்தின் செயலாளர் சுப்ரதா மொண்டல் கூறியுள்ளார்.

கிழக்கு பர்தவானில் உள்ள விவசாய கிராமங்களில் சிபிஎம் ஆதரவு அமைப்பான அகில இந்திய கிசான் சபா பேரணிகளை தொடங்கியுள்ளது.

“விவசாயிகளுக்கு அதானி குழுமம் நிச்சயம் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும்” என கிசான் சபாவின் மாநில செயலாளர் அமல் ஹல்தார் தெரிவித்துள்ளார்.

”அதானி குழுமம் முதலில் நெல்லுக்கு நல்ல விலை கொடுத்துச் சந்தை முழுவதையும் கைப்பற்றும். பின்னர், நிறுவனம் ஏகபோகமாக மாறியபிறகு, ​​ அவர்களுக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். பின்னர், மாநிலத்தின் பிற பகுதிகளிலும்  வணிகத்தை விரிவுபடுத்தி, சிறு வணிகர்களை விரட்டுவார்கள்.” எனக் கூறியுள்ளார்.

Source: The Telegraph

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்