Aran Sei

அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் : சிபிஎம் புதிய அறிவிப்பு

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தில் வரும்  டிசம்பர் 14 ஆம் தேதி அம்பானி, அதானி பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் நடத்தப்படவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “டிசம்பர் 14 அன்று, தில்லி மாநகரத்தின் அருகாமையில் இருக்கும் மாநில விவசாயிகள் டில்லியை நோக்கிப் புறப்பட வேண்டுமென்றும், அதே தேதியில் இதர மாநிலங்களில் ஆதரவு இயக்கம் நடத்திட வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடமிருந்து அறைகூவல் வந்துள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங்

“கடும் குளிரிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் டில்லி மாநகரத்தை முற்றுகையிட்டு உறுதியாகத் தொடர்ந்து போராடுகிற போது, அப்போராட்டத்தை ஆதரிக்கின்ற அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல வடிவங்களில் இயக்கங்கள் நடத்திட வேண்டுமென விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் டிசம்பர் 14 ஆம் தேதியன்று காத்திருக்கும் போராட்டத்தை துவக்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

`அதானிக்குக் கடன் வழங்காதே’ – சிட்னி மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

மேலும், அகில இந்திய விவசாயச் சங்கத்தின் கூட்டமைப்பின் அறைகூவலின் அடிப்படையில் நாடு முழுவதும் அம்பானி, அதானி பொருட்களைப் புறக்கணிக்கும்  இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் டிசம்பர் 14 ஆம் தேதியன்று ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க், ஜியோ விற்பனைக் கடைகள் முன்பு ரிலையன்ஸ் பொருட்களைப் புறக்கணியுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை அட்டைகள் ஏந்தி பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

தேசம் காக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து நடக்கக்கூடிய “அதானி, அம்பானி பொருட்களைப் புறக்கணிக்கும்” இயக்கத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப் பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்