Aran Sei

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு காவிரி உரிமை மீட்புக் குழு வேண்டுகோள்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் கர்நாடக அரசு அணைக்கட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு முதலமைச்சருக்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

‘காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்ட முயற்சிக்கும் புதிய அணை’ – அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டிட, கட்டுமானப் பொருட்களை கர்நாடக அரசு அங்கே குவித்துள்ளது என்ற செய்தி, ஏடுகளில் வந்ததைப் பார்த்து, அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அணை கட்டும் முயற்சிக்கு அண்மையில் தடை விதித்தது. அத்துடன், மேக்கேத்தாட்டுப் பகுதியில் அணைகட்டும் ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று அறிந்து அறிக்கை அளிக்க ஆய்வுக் குழுவையும் அமைத்தது.” என்று தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று தீர்ப்பாயத் தென் மண்டல அமர்வு தனது தீர்ப்பில் கூறியுள்ளதாகவும், இதுகுறித்து தங்கள் கருத்துகளையும் விளக்கங்களையும் 05.07.2021 அன்று தீர்ப்பாயத்தில் வந்து தெரிவிக்குமாறு கர்நாடக – தமிழ்நாடு அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காவிரி டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியை தடுத்திட வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

 

மேலும், அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வின் இந்தத் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு கர்நாடக அரசு மறுபரிசீலனை மனுப்போட்டது. இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமையக முதன்மை அமர்வு நீதிபதி ஏ.கே. கோயல், கர்நாடக அரசின் வழக்கறிஞர் எழுப்பிய கோரிக்கையை ஏற்று, தீர்ப்பாயத்தின் தீர்ப்பை இரத்துச் செய்து (18.06.2021) ஆணையிட்டுள்ளதாகவும் காவிரி உரிமை மீட்புக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வாதங்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஒருதலைச் சார்பாக நீதிபதி ஏ.கே. கோயல் அமர்வு, பசுமைத் தீர்ப்பாயத் தென்மண்டல அமர்வின் தடையை இரத்து செய்து, கள ஆய்வுக் குழுவையும் கலைத்து விட்டது. இது நீதி இயல் முறைக்கு நேர் முரணான செயல் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜக்கியின் காவிரி அழைக்கிறது திட்டம் அரசின் திட்டமா ? – கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி

.
மேலும், இந்தத் தீர்ப்பும் நேரடியாக, அணை கட்டிக் கொள்ளக் கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கிடவில்லை எனவும் . ஆனால், இத்தீர்ப்பால் துணிச்சல் பெற்று, கர்நாடகத்தின் பா.ச.க. முதலமைச்சர் எடியூரப்பா, மேக்கேதாட்டு அணைகட்டும் பணிகளைத் தொடங்குவேன் என்று கூறியுள்ளதாகவும் காவிரி உரிமை மீட்புக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,”தமிழ்நாடு அரசு உடனடியாக ஓர் ஆய்வுக் குழுவை மேக்கேதாட்டுப் பகுதிக்கு அனுப்பி அறிக்கை பெற வேண்டும்; இடைக்காலத் தடை ஆணை கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள மேக்கேதாட்டு தடை ஆணை கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரிக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று.தமிழ்நாடு முதலமைச்சருக்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்