ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஆட்சேபகரமான ட்வீட் செய்ததற்காக கன்னட திரைக்கலைஞர் சேத்தன் குமார் அஹிம்சா கைது செய்யப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் குறித்து திரைக்கலைஞர் சேத்தன் குமார் அஹிம்சா எழுதிய ட்விட்டை பகிர்ந்து புதிதாக எழுதியுள்ளார். அந்தப் பழைய ட்விட்டில், “”இந்த வாரம் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித், கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் பிக்கு என்பவருக்கு முன் ஜாமீன் வழங்கினார். இதை ஒரு பெண்ணால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 21வது நூற்றாண்டில் நீதிபதியின் ஆணாதிக்கமும் பெண் வெறுப்பும் நல்லதன்று.
மேல் குறிப்பிட்ட ட்விட்டை ‘டேக்’ செய்து தற்போது வேறு ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார். அதில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ட்வீட் இது. ஒரு கற்பழிப்பு வழக்கில் நீதிபதி கிருஷ்ணா தீட்சித் இத்தகைய கவலையளிக்கும் கருத்துக்களை தெரிவித்தார். இப்போது இதே நீதிபதிதான் அரசுப் பள்ளிகளில் #ஹிஜாப்களை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கிறார். அவருக்குத் தேவையான தெளிவு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மத்தியப் பிரிவு காவல் துணை ஆணையர் எம்.என்.அனுசேத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னட திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான சேத்தன் அஹிம்சா பெங்களூரு நகர காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிஜாப் வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சர்ச்சைக்குரிய ட்வீட் செய்ததற்காக, ஷேஷாத்ரிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமையன்று அவர் மீது ஐபிசியின் 505(2) மற்றும் 504 இன் பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
பசுவை பாதுகாப்பவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் – உ.பி. மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்
கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா, ஹிஜாப் சர்ச்சை குறித்து விமர்சித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துவந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு பெங்களுருவில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் ஆதரவு அமைப்புகள் நடத்திய பேரணி குறித்தும் தொடர்ச்சியாக பல ட்வீட்களை பதிவு செய்திருந்தார் குறிப்பிடத்தக்கது.
Source: indianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.