மாரடைப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி காலமானார்.
நேற்று (ஏப்ரல் 16) நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரைச் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
நடிகர் விவேக்கிற்கு, இதய குழாய்யில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் ஆஞ்சியோபிளாஸ்டி அளித்து அடைப்பு நீக்கப்பட்டு, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்திருந்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த நடிகர் விவேக், இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணிக்குக் காலமானார்.
அவரது உடல் திரைக் கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.