Aran Sei

வாக்கு செலுத்த கருப்பு, சிவப்பு நிற சைக்கிளில் வந்த நடிகர் விஜய் – பெட்ரோல், டீசல் விலைஉயர்வைக் கண்டிக்கிறாரா விஜய்?

மிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் கருப்பு சிவப்பு வண்ண சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார் நடிகர் விஜய். நீலாங்கரை உள்ள வீட்டிலிருந்து வாக்குச் சாவடி வரை சைக்கிளில் வந்தார்.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் ஒரே கட்டமாக இன்று (ஏப்ரல் 6) ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.

காலை 11 மணி நேர நிலவரப்படி 20.7 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காலை முதல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், பிரபலங்களும் தங்கள் வாக்கு இருக்கும் வாக்குச் சாவடியில், தங்கள் வாக்கைச் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்து விஜய் வாக்கு செலுத்தினார்.

நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து கருப்பு சிவப்பு வண்ண சைக்கிளில் பயணித்து வாக்கு சாவடிக்கு வந்தார்.

பெட்ரோல் டீசல்  விலை உயர்வை உணர்த்தும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வந்தாரா என அவர்கள்  ரசிகர்கள் விவாதித்து வருவதாக பல ஊடகங்களும் கருத்து தெரிவித்து வருகின்றன.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்