Aran Sei

வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நடிகர் சோனு சூட் – கொரோனா நிதியை மறைத்ததாக வருமானவரித்துறை தகவல்

ந்தி நடிகர்  சோனு சூட் 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரி துறை தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள அவர் வீட்டைச் சோதனை செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் இத்தகவலை கூறியுள்ளனர்.  தமிழில் அருந்ததி, சந்திரமுகி போன்ற படங்கள் மூலம் சோனுசூட் தமிழ் மக்களுக்கு  அறிமுகமானார். கோரானா ஊரடங்கின் போது ரஷ்யாவில் சிக்கிய மாணவர்களை விமானம் அனுப்பி மீட்டது அவருக்குப் பெரும் புகழ் வெளிச்சத்தை அளித்தது.

இந்நிலையில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் கல்விக்கான தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்டார். கோரோனாவின்போது மக்களுக்கு உதவுவதற்காக அவர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த அறக்கட்டளைக்கு மொத்தமாக 18 கோடிக்கும் மேல் பணம் பெறப்பட்ட நிலையில் 1.7 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுளது.

இந்நிலையில், சோனு சூட் டுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 3 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் ரூ.20 கோடி வரை சோனு சூட் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

‘‘நடிகர் சோனு சூட் கணக்கில் காட்டப்படாத வருமானத்தை எல்லாம், போலியான கடன் பத்திரங்களாகக் காட்டியுள்ளார். வரி ஏய்ப்பு செய்வதற்காகவே இதை அவர் திட்டமிட்டு செய் துள்ளார்’’ என்று வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்