Aran Sei

“பாஜக இந்நாட்டைவிட்டு அகற்றப்படும் போதுதான் நாட்டிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அர்த்தம்” – நடிகர் சித்தார்த்

பாஜக இந்த நாட்டைவிட்டு அகற்றப்படும்போதுதான் இந்த நாட்டிற்கு உண்மையிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது போன்றதாகும் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

‘மக்களை கொலை செய்யும் பாஜக அரசே வரலாறு உங்களை மன்னிக்காது’- நடிகர் சித்தார்த்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நீங்கள் அதிகாரத்தை விட்டு வெளியேற்றப்படுமாறு வாக்களிக்கப்படும்போது தான், இந்த நாட்டிற்கு உண்மையிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது போன்றதாகும். அது நடக்கும், நாங்கள் இங்கே தான் இருக்கிறோம், குறைந்தபட்சம் அதை நினைவு படுத்துவதற்காகத் தான் இந்தப் பதிவை இடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பாஜக வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுக்கு எதிர் வினையாக இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை: நாம் அனைவரும் முட்டாள்கள் – நடிகர் சித்தார்த்

இதற்கு முன் நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், வாக்குக்காக கொரோனா தடுப்பூசியா? என கேள்வி எழுப்பிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்