Aran Sei

பாஜகவினரால் மிரட்டப்படுகிறேன் – நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு

டிகர் சித்தார்த்திற்கு தமிழக பாஜக உறுப்பினர்களிடம் இருந்தும், பாஜகவின் இணைய பிரிவில் உள்ளவர்களிடம் இருந்தும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் பல மாதங்களாகவே மத்திய பாஜக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

“பாஜக இந்நாட்டைவிட்டு அகற்றப்படும் போதுதான் நாட்டிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அர்த்தம்” – நடிகர் சித்தார்த்

இந்நிலையில், சித்தார்த்தின் தொலைபேசி எண்ணைச் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட நபர், “இது அவன் அலைபேசி எண், யாரும் கால் பண்ணி திட்டக்கூடாது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்றைய தினம் பல சமூகவலைதள பதிவுகளில் பாஜகவினர் எனது எண்ணைப் பதிவிட்டு, என்னைத் தாக்குமாறும், திட்டுமாறும் பதிவிட்டுள்ளனர். மேலும், ‘இனி இவன் வாய திறக்கக்கூடாது’ என்றும் குறிப்பிட்டுள்ளனர், நாம் கொரோனாவிடம் இருந்துகூட தப்பித்துவிடக்கூடும் ஆனால் இது போன்ற மனிதர்களிடம் இருந்து தப்பிப்போமா?” என்று கூறியுள்ளார்.

‘மக்களை கொலை செய்யும் பாஜக அரசே வரலாறு உங்களை மன்னிக்காது’- நடிகர் சித்தார்த்

மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “பாஜகவின் இணையப் பிரிவு, தமிழக பாஜக உறுப்பினர்கள் எனது எண்ணைப் பரப்பி வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை, கொள்ளை, பாலியல்வன்கொடுமை விடுத்து 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. எல்லா தொலைபேசி அழைப்புகளையும் பதிவு செய்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன். நான் ஓயமாட்டேன், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹாஷ்டாக் ட்வீட்டரில் பரவி வருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்