Aran Sei

ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி : ”உங்கள் வார்த்தைகள் விலை மதிப்பற்றவை” –  நடிகர் சித்தார்த் நெகிழ்ச்சி

பாஜகவினரால் மிரப்பட்டு வரும் நிலையில், ஆதரவளித்த மக்கள் அனைவருக்கும் நன்றி என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாவே மத்திய அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி வந்த நடிகர் சித்தார்த், கொரோனாவில் அரசின் செயல்பாடுகளையும் விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்வினையாக பாஜகவின் இணைய பிரிவினரால், நடிகர் சித்தார்த்தின் செல்போன் எண் பகிரப்பட்டு தொடர்ந்து மிரட்டப்ப்பட்டு வருவதாக நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவளிக்கும் விதமாக மக்கள் #istandwithsiddharth என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆக்கினர். இதற்கு நடிகர் சித்தார்த் நன்றி தெரிவித்துள்ளார்.

பாஜகவினரால் மிரட்டப்படுகிறேன் – நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், ”என் அம்மா பயந்துவிட்டார். அவருக்குத் தைரியம் சொல்லவதற்கு  என்னிடம் வார்த்தைகள் இல்லை.  உங்களின் ட்விட்டர் பதிவுகளைத் தான் படித்துக் காண்பித்தேன். என்னுடன் துணைநின்ற அனைவருக்கும் நன்றி.” என பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்தப் பதிவில், ”நாங்கள், மிகவும் எளிய பிண்ணனியில் இருந்து வந்த மிகவும் சாதாரணமானவர்கள். உங்கள் ஒவ்வொருவரின் வார்த்தைகளும் அத்தனை மதிப்புமிக்கவை!. அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்புவோம்.” என தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்