Aran Sei

‘மக்களை கொலை செய்யும் பாஜக அரசே வரலாறு உங்களை மன்னிக்காது’- நடிகர் சித்தார்த்

”வரலாறு உங்களை மறக்கவும் செய்யாது, மன்னிக்கவும் செய்யாது” என்று திரைப்பட நடிகர் சித்தார்த், பாஜக அரசை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை பரவி வரும் சூழலில், நோய்த்தொற்று பரவுவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்த அவர், நெருக்கடியைச் சமாளிக்க 5 ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

மன்மோகன் சிங்கின் கடிதத்துக்குப் பதில் கடிதம் எழுதியிருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அந்தக் கடிதத்தைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இணைத்து, “ இது போன்ற கடினமான காலத்தில் உங்களுடைய கட்சிக்காரர்களுக்குப் பொன்னான அறிவுரை வழங்கி, ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நீங்கள் அளித்தால், வரலாறு உங்களிடம் கருணையுடன் இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடைய பதிலைத் திரைப்பட நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் கொரோனாவுக்கு எதிராக போராடுபவர் அல்ல, கொரோனா நோய்த்தொற்றினுடைய கூட்டாளி” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “எந்தச் சூழலிலும், தேர்தலில் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்க மக்களைக் கொலை செய்து கொண்டிருப்பதை தொடருங்கள். சிறிதும் அறிவு இல்லாமல், மத நிகழ்வு எனும் பெயரில் இன்னும் அதிகமான மக்களை வரவழைத்துக் கொலை செய்யுங்கள்” என்று ட்விட் செய்துள்ளார்.

கும்பமேளாவை தொடர்ந்து சார் தாம் புனித யாத்திரைக்கு அனுமதி: கொரோனாவை அலட்சியப்படுத்துகிறதா உத்தரகாண்ட் அரசு?

இறுதியாக, “வரலாறு உங்களை மறக்கவும் செய்யாது, மன்னிக்கவும் செய்யாது. அசிங்கம்”. என்று நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்