Aran Sei

“அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” – ரஜினி மீண்டும் பல்டி

2021 சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதற்காக ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் “கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்!” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இறுதியில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினி அறிவித்தார். அதன் பின்னர், அவர் தீவிர அரசியலில் களமிறங்குவது குறித்து தொடர்ந்து முரண்பட்ட கருத்துகளை கூறிவந்தார்.

கடந்த நவம்பர் 30-ம் தேதி, ரஜினிகாந்த் தனது மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தொடங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து, 2021-ம் ஆண்டு, ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், டிசம்பர் மாதம் 31-ம் தேதி கட்சியைக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.

முன்னதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்ட ரஜினி, “வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, தனது சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “2017 டிசம்பர் 31 அன்று சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் கட்சி ஆரம்பித்து மக்களைச் சந்தித்து, 234 தொகுதியிலும் போட்டியிடுவேன் என்று கூறினேன். அதன்பின்னர் மக்களிடையே எழுச்சி வர வேண்டும் எனக் கூறினேன்” என்பதை சுட்டிக்காட்டினார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது : டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மாலை முடிவெடுக்கப்படும்

“ஆனால், அதை என்னால் செய்ய முடியவில்லை. எனக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மக்களைச் சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், மருத்துவர்கள் கொரோனா பேரிடரால் வெளியே செல்வது ஆபத்து எனத் தெரிவித்தனர். தற்போது அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் கட்டாயம். அன்று சொன்னதுதான் இன்றும் சொல்கிறேன். கொடுத்தவாக்கில் தவறமாட்டேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. சந்தோஷம்தான்! என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் எனக் களம் இறங்கி உள்ளேன். அரசியல் மாற்றம் தேவை, அது கட்டாயம் நிகழும்” என்று அவர் தெரிவித்தார்.

 

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி – ரத்தஅழுத்த மாறுபாட்டிற்காக சிகிச்சை

 

“நான் ஏற்கெனவே உயிருக்குப் போராடியபோது தமிழக மக்கள் செய்த பிரார்த்தனையால் உயிர் பிழைத்து வந்தேன். நான் வெற்றி பெற்றாலும் அது மக்களின் வெற்றி. நான் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை! மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும். மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்!” என்றும் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

உடல்நலப் பிரச்சனையால் கட்சி தொடங்குவது தடைபடுகிறதா? : ரஜினிகாந்த்

 

இதையடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தி என்பவரை ரஜினி அறிமுகம் செய்தார். இவர் பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தவர். காந்திய மக்கள் இயக்த்தின் தலைவரான தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்தார்.

 

’கொரோனா வருவதற்கு சாத்தியமுள்ள வேலைகளில் ஈடுபட வேண்டாம்’ – ரஜினிக்கு அப்போலோ அறிவுறுத்தல்

 

புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக அறிவித்த பிறகு ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த கலந்துகொண்டார். இந்தப் படபிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்றுற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தொற்றால் பாதிக்கப்படவில்லையென்றாலும் ரத்த அழுத்த மாறுபாட்டால் ஐதராபாத் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

உடல்நலப் பிரச்சனையால் கட்சி தொடங்குவது தடைபடுகிறதா? : ரஜினிகாந்த்

 

கடந்த வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவர் முழு ஒய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்