Aran Sei

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு மரணம்

பிரபல நடிகரும் ஓவியருமான நடிகர் பாண்டு கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த நான்கு தசாப்தங்களாக, தமிழ் திரையுலகில் நகைச்சுவை, குணச்சித்திரம் என ஏற்றுக்கொண்ட எல்லா வகை கதாபாத்திரங்களாலும் மக்களைக் கவர்ந்தவர் நடிகர் பாண்டு.

நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் அவரிடம் வெளிப்படும் தனித்துவமான உடல்மொழியும், நையாண்டிமொழியும் அவருக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத் தந்தது.

இந்நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக பாண்டுவும் அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

டெல்லியில் கணக்கிடாமல் விடப்பட்ட 1150 கொரோனா இறப்புகள் : சுடுகாடுகளில் என்டிடிவி நடத்திய ஆய்வு

கெடுவாய்ப்பாக, இன்று (மே 6) அதிகாலை சிகிச்சை பலனின்றி பாண்டு உயிரிழந்துள்ளார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

74 வயதான பாண்டுவிற்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு என்று மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில், திரையுலக பிரபலங்களின் இல்லங்களுக்கும் நிறுவனங்களுக்கும் அவர் பெயர் பலகைகளை வடிவமைத்து வந்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் தீவிர அபிமானியான பாண்டு, எம்.ஜி.ஆர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதிமுக கொடியையும் இரட்டை இலைச் சின்னத்தையும் வடிவமைத்து தந்தார்.

அண்மையில், பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் கொரோனா தொற்றால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்