மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் (மார்ச் 27- முதற்கட்ட தேர்தல்), பிரபல நடிகரும் முன்னாள் திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக மிதுன் சக்ரவர்த்தி விளங்கினாலும், அரசியல் களத்திலும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்.
1960 களில் இடதுசாரி சித்தாந்தங்களில் ஈர்க்கப்பட்ட மிதுன், நக்சலைட் இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தார். பின்னர், தீவிர இடது சித்தாந்த கருத்தியலிலிருந்து, வேறுபட்டு இடது சாரிகளின் மைய நீரோட்ட அரசியலை ஆதரிக்கத் தொடங்கினார். மேற்கு வங்கத்தை ஆண்ட, ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளைப் ஏற்பத்திக் கொண்டார்.
மேற்கு வங்கம் – லெனின் சிலையை திறந்து வைத்த திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ
பின்னர், அதிலிருந்து விலகி, மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியால், மாநிலங்களவைக்கு அனுப்பபட்ட மிதுன் சக்ரவர்த்தி, சாரதா சிட் ஃபண்ட் ஊழலில் தொடர்புடையதாக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சிவசேனா முடிவு
இதன் பின்னர், அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட அவர், ரூ 1 கோடியே 20 லட்சத்தை அமலாக்கத்துறையிடம் செலுத்தினார். இதையடுத்து உடல்நிலை கோளாறுகளைக் காரணம் காட்டி, தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, முழு நேர அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகியிருந்தார்.
மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பேசிய யோகி ஆதித்யநாத் – திரிணாமூல் கண்டனம்
கடந்த மாதம், ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் மிதுன் சக்ரவர்த்தியை அவரது மும்பை இல்லத்தில் சென்று சந்தித்தார். இது அரசியல் சந்திப்பு இல்லை, சாதாரண சந்திப்பு தான் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டே நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் மோகன் பாகவத்தை தான் சந்தித்ததாகவும், மோகன் பாகவத்துடன் தனக்கு ஒரு ”ஆன்மிக இணைப்பு” இருப்பதாகவும் மிதுன் தெரிவித்தார்.
மேற்கு வங்க தேர்தலில் “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு
இந்நிலையில், இன்றைய தினம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தின் பிரிகேட் பரேட் மைதானத்தில் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள இருக்கும் சூழலில், மேற்கு வங்கத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்துள்ளார்.
மிதுன் சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்துள்ளதை, பாஜகவின் தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா மற்றும் மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் வரவேற்றுள்ளனர். தொடர்ச்சியாக, திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.