Aran Sei

ஹிஜாப் வழக்கில் நீதிபதியை விமர்சித்த நடிகர் – பிணை வழங்கிய நீதிமன்றம்

ஹிஜாப் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி கிருஷ்ணா தீக்‌ஷித்தை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சாவிற்கு பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

வகுப்புகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் வகுப்பறைகளுக்குள் எந்த மத அடையாளங்களையும் அணிந்து வர கூடாது என இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.
இடைக்க்கால உத்தரவு வழங்கிய நீதிபதி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா, அதே நீதிபதி 2020 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேற்கொள்காட்டி, அவரை விமர்சித்திருந்தார்.

ஹிஜாப் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை விமர்சித்த கன்னட நடிகர் – கைது செய்து காவல்துறை நடவடிக்கை

இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த பெங்களூரு சேஷாத்ரிபுரம் காவல்நிலையம், சேத்தன் குமார் பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தது.

இதனையடுத்து சேத்தன் குமார் சார்பில் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது சேத்தன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலன், ”காவல்துறையினர் எந்த வித முன்னறிவிப்புமின்றி சேத்தனை கைது செய்ததோடு, அவரது மனைவி மேகாவிடம் கையெழுத்து பெறாமல் 6 மணிநேரம் ரகசிய இடத்தில் மறைத்து வைத்திருந்தனர். மேலும், இவ்வழக்கில் காவல்துறையினர் அனைத்து வரம்புகளையும் மீறி செயல்பட்டுள்ளனர்.” என வாதிட்டார்.

ஹிஜாப் தடையை விசாரிக்கும் நீதிபதியை விமர்சித்த கன்னட நடிகர் – நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

 

இதனை ஏற்ற நீதிமன்றம், இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தி, சேத்தன் குமாருக்கு பிணை வழங்கியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்