Aran Sei

பாஜகவில் இணைந்தததால் நாடகத்திலிருந்து நீக்கப்பட்ட நடிகர் – மேற்குவங்க நாடகக்குழு அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் பாஜகவில் சேர்ந்ததற்காக நடிகர் ஒருவரை நாடக குழுவொன்று அவர் நடித்த நாடகத்திலிருந்து விலக்கியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

‘பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு’ – பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்

உத்பல் தத் எழுதிய நாடகத்தைத் தழுவி இயக்கப்படவிருந்த ” குஹும் நை” என்ற நாடகத்தில் நடித்த நடிகர் கௌஷிக் கர் பாஜக கட்சியில் சேர்ந்ததற்காக அவரைக் குழுவிலிருந்து நீக்கி இருப்பதாக அந்தக் குழுவைச் சேர்ந்த சவுரவ் பலோதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுரவ் பலோதி மூன்று நாட்களுக்கு முன்பு முகநூலில் வெளியிட்டிருந்த பதிவில், ” பாஜகவில் சேர்ந்த காரணத்திற்காக கௌஷிக் கர்ரை ‘குஹும் நை’ நாடகத்திலிருந்து விலக்குகிறோம்,அவரை நீக்குவதற்கு சமகாலத்தில் இதுவே மிகமுக்கிய காரணம் ” என்று பதிவிட்டுள்ளதாக என்டிடிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எதிரி பாஜகவை விடுத்து, சிபிஎம்-யை எதிர்க்கும் காங்கிரஸ்’ – குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்

இந்தநிலையில் அந்த நாடகக் குழு ‘குஹும் நை’ நாடகம் நிகழ்த்துவதற்கான தேதியையும் அறிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து முகநூலில் பதிவிட்டுள்ள ஆர்க்கா ராய் , ” எங்கே போனது கலைஞனின் சுதந்திரம்? ஜனநாயக உரிமை ? ஒருவர் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம் அதில் யாரும் தலையிட முடியாது ” என்று பதிவிட்டுள்ளார்.

நக்சலைட் இயக்கங்கள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக : நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் அரசியல் பயணம்

மேலும், இந்தச் சம்பவம்குறித்து கூறியுள்ள இயக்குனர் கமலேஸ்வர் முகர்ஜி ,”எனது படங்களுக்கு நடிகர்களைத் தேர்வு செய்யும்போது அவர்களது நம்பிக்கைகள், அரசியல் தேர்வைக் குறித்து பார்க்கமாட்டேன்’ என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள சவுரவ் பலோதி, இந்த நாடகம் மோடி அரசின் நிலைமையைப் பேசக்கூடியது இதில் எப்படி அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை அனுமதிக்க முடியும் என்றும் பதிலளித்துள்ளதாக என்டிடிவி செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்