Aran Sei

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க வேண்டும் – சங்கர்ஷ் மோர்ச்சா சங்கத்தினர் பிரதமருக்கு கடிதம்

image credit : thewire.in

கொரோனா தொற்றால் அதிகமானோர் வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதால் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேலும் 50 நாட்கள் கூடுதல் வேலை வழங்கவேண்டுமென பிரதமருக்கு சங்கர்ஷ் மோர்ச்சா சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளதாக  தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் செய்யும் ஒன்றிய அரசு – 40% ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதாக தகவல்

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள கடிதத்தில், “கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் எண்ணற்ற ஏழைகள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, தொழிலாளர்கள் தேசிய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 50 நாட்கள் கூடுதல் வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென கோரி உள்ளார்கள்” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான நிதி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்படவேண்டுமென அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் – தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கூலி உயர்த்திய மத்திய அரசு

அதுமட்டுமல்லாது, இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் குழுவின் புள்ளிவிவரப்படி, மார்ச் முதல் ஏப்ரல் வரை 7.35 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 13 வரை, கிராமப்புற வேலைவாய்ப்பின்மை வார விகிதம் 12% ஆக உள்ளதாகவும், மார்ச் 2020 வரை நகைக்கடன் பெறுவோர் விகிதம் 82% உயர்ந்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்  தி இந்து  செய்தியில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்