உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் முக்கிய வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் முன்னாள் அரசு அதிகாரிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்களுக்கு வெளிப்படையான ஒரு கடிதத் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ள 421 வழக்குகளில் 49 முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவற்றில், காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை திம்பப் பெற்றது, உபா சட்டத்தை அரசு தவறாக பயன்படுத்துவது, ரஃபேல் விமான ஒப்ந்த ஊழல், தேர்தல் பத்திரம், குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட வேண்டியவை என்று அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன், பெகசிஸ் உளவு செயலி மற்றும் ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் தனிநபர் சுதந்திரம் குறித்து தொடரப்பட்ட வழக்குகளும் விரைந்து விசாரிக்கப்பட வேண்டியவை என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் தனிநபரின் சுதந்திரம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தவை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் சில வழக்குகள் 2 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளதால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.