அசாம் மாநிலம் சிப்சாகர் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சமூக செயல்பாட்டாளருமான அகில் கோகோய் இரண்டு நாட்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஏறத்தாழ 550 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் அவருக்கு நேற்றைய தினம் இரண்டு நாட்கள் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று ஜூன் 25 அன்று தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளதாகவும், இந்நிலையில் அவர் கவுஹாத்தி பகுதியில் உள்ள அவர் மனைவி மற்றும் மகனையும், அங்கிருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் ஜோர்ஹட் பகுதியில் வசிக்கும் தன் தாயை சந்திக்க விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சிறையிலிருந்து போட்டியிட்ட மனித உரிமை செயல்பாட்டாளர் அகில் கோகோய் – பாஜகவை எதிர்த்து பெரும்வெற்றி
மேலும், அகில் கோகோய் அவரது சட்டமன்றத் தொகுதி மக்களை பார்க்க வேண்டும் எனக்கோரிய வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
அகில் கோகோய் தாக்கல் செய்திருந்த பிணை மனுவில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள தனது 14 வயது மகனையும், உடல்நலக் குறைபாடுள்ள 84 வயது தனது தாயையும் பார்க்க வேண்டுமென கூறியிருந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தி குறிப்பிடுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய அகில் கோகோய் – பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
கடந்த டிசம்பர் 2019, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானார் என்று தேசிய புலனாய்வு முகமை அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் 22 அன்று, தேசிய புலனாய்வு மையம் அவர்மீது பதிந்திருந்த 2 சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில், ஒன்றை நீக்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.