Aran Sei

எழுபது வயதுக்கு மேற்பட்ட சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் – சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர் உச்சநீதிமன்றத்தில் மனு

ழுபது வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டுமென, சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

‘ஏழு தமிழர்கள், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும்’ – தமிழ்நாடு சிறைத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ மனு

மேதா பட்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஒன்றிய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் 70 வயதுக்கு மேற்பட்ட சிறைக்கைதிகளை விடுவிப்பதில் பாரபட்சமின்றி செயல்படும் வகையில், அதிகாரம் கொண்ட உயர் மட்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மனுவில்,” கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா, ஒரு சிறைச்சாலைக்குள் இருக்கும் வரை யாரும் உண்மையிலேயே ஒரு தேசத்தை அறிய மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். அதே போன்று, ஒரு தேசம் அதன் உயர்ந்த குடிமக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை விட, அது எளிய மக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை வைத்தே தீர்மானிக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்” என்று  மேற்கோளாகக் காட்டியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஏழு தமிழர்களையும் நெடுங்கால இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்’ – அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கூட்டறிக்கை

அதுமட்டுமல்லாது, தேசிய குற்றவியல் ஆவணத் துறையின் தகவலின் படி, இந்தியாவில் உள்ள சிறைகளில் 19.1% பேர் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளில் 10.7% பேர் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை கலைஞர் பிறந்தநாளில் விடுவிக்க வேண்டும்’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணி வேண்டுகோள்

கடந்த மே 16 வரையான, தேசிய சிறைத்துறை தகவலின் படி 5,163 கைதிகள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், மகாராஷ்டிரா, மணிப்பூர் மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் தகவல் தெரியவில்லை என்றும் மேதா பட்கர் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, அந்த மனுவில், வயது முதிர்வின் காரணமாக அவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகக்கூடிய, வாய்ப்புள்ளதால் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்