Aran Sei

மலக்குழி மரணங்களே நிகழவில்லை என்ற ஒன்றிய அரசின் கூற்று மனிதத்தன்மையற்றது- பெஸ்வாடா வில்சன்

டந்த ஐந்து வருடங்களில் மலக்குழி மரணங்களே நிகழவில்லை என்ற ஒன்றிய அரசின் கூற்று  மனிதத்தன்மையற்றது,கொடூரமானது  என ராமன் மகசேசே விருது பெற்றவரும்  சஃபாய் கர்மாச்சாரி அந்தோலனின் அமைப்பைச் சார்ந்த பெஸ்வாடா வில்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும்  பணியில் குறைந்தபட்சம்  472 பேராவது இறந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

ஜூலை 28 அன்று,மலக்குழி மரணங்கள் தொடர்பாக மாநிலங்களவையில்  எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த  ஒன்றிய  சமூக நீதித்துறை அமைச்சர்  ராம்தாஸ் அத்வாலே   கடந்த ஐந்து வருடங்களில் மலக்குழி மரணங்களே நிகழவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள பெஸ்வாடா வில்சன்,” மனிதக் கழிவுகளை அகற்றும்  பணி  செய்வது  மனிதத்தன்மையற்றது என்றால், அரசின் இந்த கூற்று   உச்சபட்ச மனிதத்தன்மையற்ற,கொடூரமான வார்த்தையாகும். இந்த வேலை செய்பவர்கள்  இறந்திருக்கிறார்கள்  என்று அரசுக்கு தெரியும், அது குறித்து கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கூட விவாதித்திருந்தனர். ஆனால், தற்போது  இந்த நாடாளுமன்றம் இறப்பே இல்லை என்று கூறுகிறது”  என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது – திருமாவளவன்

மேலும்,  ,மலக்குழியை சுத்தம் செய்பவர்கள்  என்ற சொற்றொடரை அரசு திரிக்க முயல்கிறது என்றும், உலர் மலக்குழிகளை சுத்தம் செய்பவர்களோடு, பாதுகாப்பு உபகரணங்களின்றி   செப்டிக் டேங்குகள் மற்றும் சாக்கடைகள் சுத்தம் செய்பவர்களையும்ஒன்றிணைத்து  குறிப்பிடுகிறது   என்றும்   பெஸ்வாடா வில்சன் கூறியுள்ளார்.

பொய்கள் நிறைந்த பிரதமர் மோடியின் உரை – உண்மை சரிபார்ப்பில் அம்பலம்

அதுமட்டுமல்லாது, ” கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், 340 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டனர், ஆனால் எங்கள் பதிவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இது 472 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு, இதுவரை, 26 பேர் இறந்துள்ளனர். மேலும் அவர்கள் அதைப் பற்றி அரசு ஒரு  அறிக்கை கூட வெளியிடவில்லை. இது ஒரு அப்பட்டமான மீறல், இதற்கு பிரதமர் உரிய  பதிலளிக்க வேண்டும், ” என்று  சஃபாய் கர்மாச்சாரி அந்தோலனின் அமைப்பைச் சார்ந்த பெஸ்வாடா வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

source; THE HINDU

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்