Aran Sei

மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படை மீது நடவடிக்கை வேண்டும் – ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் விடுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி

மிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும், மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை, மீனவர்களின் படகுகளையும், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்தது. மேலும், 23 மீனவர்களையும் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தது.

‘தனி கட்சி: பாஜகவுடன் கூட்டணிக்கு தயார்’- பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்

இதன் தொடர்ச்சியாக, வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை, மீனவர்களின் படகை கவிழ்த்து உள்ளது. இதில், 2 மீனவர்கள் உயிர் தப்பிய நிலையில், மீனவர் ராஜ்கிரன் என்பவர் நீரில் மூழ்கி மயமானார். இலங்கை கடற்படையினரின் இந்தத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே, மீனவர் ராஜ்கிரணை மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும், சேதமடைந்த படகுக்கு இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல் 200-ஐ எட்டினால் இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதி – அசாம் பாஜக தலைவர்

மேலும், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படை மீது வழக்குப் பதிவு செய்து, இந்தியாவில் இருக்கும் இலங்கை தூதரை கைது செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

தமிழர்கள் மீதான இது போன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்காத வகையில், இருநாட்டு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்வதாக கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்