Aran Sei

காதலிக்க மறுத்ததால் அமிலவீச்சுக்கு உள்ளான பெண் – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

த்தரபிரதேச மாநிலத்தில் காதலிக்க மறுத்த பெண்ணின் மீது அமில வீச்சில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ரேபரேலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 16 2019 அன்று அந்தப் பெண் உஞ்சகர் பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்துக்குச் செல்லும் வழியில் அந்தப் பெண்ணின் தூரத்து உறவினர் ஒருவரால் அமில வீச்சுக்கு உள்ளானதாக அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் உன்னாவில் மீண்டும் பயங்கரம் – 2 தலித் சிறுமிகள் சடலமாக மீட்பு; ஒருவர் கவலைக்கிடம்

அமிலவீச்சினால் அந்தப் பெண்ணின் கழுத்து, இடுப்பு, பின்புறம் ஆகிய பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் , கிட்டத்தட்ட 29விழுக்காடு அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் தி இந்து செய்தி கூறுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்திருந்த அந்தப்பகுதியின் துணைக் காவல் கண்காணிப்பாளர் “காதலிக்க மறுத்த அந்தப் பெண்ணின் முகத்தைச் சிதைப்பதற்காகவே அந்த அமிலவீச்சு நடத்தப்பட்டிருக்கிறது” என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“நாங்கள் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளோம்” – இஸ்லாமியர்களை பழிவாங்கும் உத்தரபிரதேச அரசு

இந்நிலையில் இந்த வழக்கில் மார்ச் 19 அன்று ரேபரேலி கீழமை நீதிமன்றம் அமிலவீச்சில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனையும், 50,000 அபராதம் விதித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமிலவீச்சுக்கு முன் தனியார் தேர்வுப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அந்தப்பெண் அவர்மீது அமிலவீச்சுக்குள்ளான அடுத்த ஒரு வருடத்திலேயே காவலர் தேர்வில் தேர்ச்சி அடைந்திருப்பதாகவும் தற்போது காவலரைவிட உயரிய பதவிக்காக முயன்று வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் – உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத் அறிவிப்பு

இதுகுறித்து தெரிவித்த அந்தப் பெண், ” சமூகத்தில் நடக்கும் இது போன்ற சம்பவங்களைப் பார்த்து அச்சப்படக் கூடாது, பெண்கள் சுயேச்சையாகத் தன்னம்பிக்கையோடு இயங்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்