Aran Sei

ஆசிட் வீச்சுக்கு உள்ளான தலித் கிறிஸ்தவ சிறுவன் மரணம் – தேவாலயத்திற்கு செல்லக்கூடாதென மிரட்டிய இந்துத்துவவாதிகளால் கொல்லப்பட்டாரா?

பீகார் மாநிலம் கயா பகுதியில் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது தலித் கிறிஸ்தவ சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அந்தச் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறும் நிலையில், அதை மறுத்துள்ள சிறுவனின் குடும்பம் வாகனத்தில் வந்த நபர்கள் ஆசிட் வீசிச் சென்றதாகக் கூறியுள்ளனர்.

உ.பி யில் பட்டியலின மாணவர்களின் தட்டுகளைத் தொடமறுத்த ஊழியர்கள் பணிநீக்கம்- புகார் அளித்தவரை மிரட்டிய ஆதிக்க சாதியினர்

இதுகுறித்து தெரிவித்துள்ள சிறுவனின் தந்தை, அந்தப் பகுதியில் உள்ள இந்துத்துவ அமைப்பினர் மக்களை தேவாலயத்திற்கு செல்லக் கூடாதென மிரட்டியதாகவும், இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிய மறுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், அந்தச் சிறுவனின் அண்ணன் வற்புறுத்தித் தலைமுடியை வெட்டியதால் அந்தச் சிறுவன் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளனர்.

பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய H.ராஜா- மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம்.

கடந்த ஆகஸ்ட் 11 அன்று காய்கறி வாங்க கடைக்குச் சென்றிருந்த சிறுவன், காயங்களோடு அலறிக் கொண்டே வீட்டை நோக்கி வந்ததாக அந்தச் சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 70% காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் காயங்கள் குறித்து தெரிவித்த மருத்துவர், இந்தக் காயங்கள் ஆசிட் அல்லது அதையொத்த வேதிப்பொருளால் ஏற்பட்டது போன்று உள்ளது எனக் கூறியுள்ளார்.

காஷ்மீரில் சட்டவிரோதமாகக் பங்களா கட்டிய பாஜக தலைவர்- ஆர்டிஐ தகவலில் அம்பலம்

இதேவேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் மரணம் தொடர்பாக காவல் நிலயத்திற்கோ நீதிமன்றத்திற்கோ செல்லக் கூடாதென மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கடிதம் பெற்றுள்ளது. அதன் பிறகே அந்தச் சிறுவனின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்