Aran Sei

எந்த தவறும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் – ” நஷ்ட ஈடு வேண்டும் “

ந்த ஒரு தவறும் செய்யாமல் காவல்துறையால் குற்றவாளிகள் என தவறாக சித்தரிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தங்களுக்கு நஷ்ட ஈடு கோரி, குஜராத் நீதிமன்றத்தில் சமீபத்தில் விடுவிக்க்ப்பட்டவர்கள் (122 பேர்) குரல் எழுப்பியுள்ளனர். இந்தச் செய்தியை தி ஹிந்து வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில், கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (சிமி) நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டதாக குஜராத், தமிழகம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகம், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 127 பேரை சூரத் காவல்துறை கைது செய்தது.

இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு பிரிவுகளில் (தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்தது, கருத்தரங்குகள் நடத்தி இயக்கத்தை ஊக்குவித்தது, இயக்கத்தின் நடவடிக்கையை விரிவுப்படுத்தியது) வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிமி வழக்கு: ஒரு குற்றமும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் விடுதலை

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சிமியைச் சார்ந்தவர்கள் இல்லை எனவும் அனைத்து இந்திய சிறுபான்மையினர் கல்வி வாரியம் நடத்திய நடத்திய கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தவர்கள் எனவும் தெரிவித்திருந்தனர்.

ராகுல் மன்னிப்பு கோரியது போல், குஜராத் கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்கட்சிகள்

”இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் எந்த ஒரு குற்றமும் செய்யாமல், கடந்த 20 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளனர்” என குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எம். ஷேக் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

குஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.என். தவே, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கமான சிமியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தினார்கள் எனவும் நிரூபிக்க நம்பதகுந்த ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லையெனக் கூறி, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் அனைவரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டுள்ளதாக தி இந்துவின் செய்தி கூறியுள்ளது.

குஜராத்திலும் மத மாற்றத் தடைச் சட்டம் – அடுத்த மாதம் கொண்டுவரப்படும் என அறிவிப்பு

இந்த வழக்கில் 127 பேர் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், சிறையிலேயே 5 பேர் மரணமடைந்த விட்டதால் மீதமிருக்கும் 122 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

 

தலித்துகளின் திருமணத்தின் போது நடக்கும் வன்முறை சம்பவங்கள் – முன்னெச்சரிக்க நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ள குஜராத் அரசு

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது விடுதலையாகியிருப்பவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் பலர், எந்த ஒரு தவறும் செய்யாமல் காவல்துறையால் குற்றவாளிகள் என தவறாக சித்தரிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தங்களுக்கு நஷ்ட ஈடு கோரி, குரல் எழுப்பியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ”அவர்களில் பலர் விசாரணையை எதிர்கொண்ட போதும் கூட பல ஆண்டுகள் சிறையில் தான் கழித்துள்ளனர். இந்த நீண்ட சட்ட நடவடிக்கைகளின் போது குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்று சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்