Aran Sei

சிறுநீர் அருந்தச்சொல்லி இளைஞரை துன்புறுத்திய உதவி ஆய்வாளர் – நடவடிக்கை எடுக்கக் கோரி தலித் அமைப்புகள் போராட்டம்

ர்நாடக மாநிலம் முடிகேரே தாலுகாவிலுள்ள கோனிபீடு பகுதியில்   கைது செய்யப்பட்ட புனித் என்ற  இளைஞரை சிறுநீர் அருந்தச் சொன்ன காவல்துறை அதிகாரி மீது புகாரளித்து  இரண்டு மாதங்களைக் கடந்த நிலையிலும்  எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை  என்றுக் கூறி  தலித் அமைப்புகள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளதாக தி இந்து  செய்தி  வெளியிட்டுள்ளது.

‘உ.பி பஞ்சாயத்து தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளது’ – யோகி ஆதித்யநாத் அரசுக்கு மாநில பாஜக தலைவர் கண்டனம்

கடந்த மே 10 அன்று, கிரகுண்டா கிராமத்தைச் சேர்ந்த சிலர் அளித்த வாய்மொழி புகாரின் அடிப்படையில் புனித்தை,கைது செய்த  காவல் துறை உதவி ஆய்வாளர் அர்ஜுன் ஹோஸ்கேரி,  புனித்தை சீறுநீர் அருந்தச் சொல்லி துன்புறுத்தியதாகவும் அந்த செய்தி  கூறுகிறது.

இதுகுறித்து புனித்  கடந்த மே 22   அன்று அளித்த புகாரை அடுத்து, உதவி ஆய்வாளர் அர்ஜுன் ஹோஸ்கேரி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த வழக்கு  குற்றப்புலனாய்வு  துறைக்கு மாற்றப்பட்டதாகவும் தி  இந்து  செய்தியில்  தெரிவிக்கபட்டுள்ளது.

கறுப்பின கால்பந்து வீரர்களுக்கு எதிரான நிறவெறியூட்டும் பதிவுகள் : வெட்கக்கேடான செயல் என இங்கிலாந்து பிரதமர் கண்டனம்

இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஓர் பெண் புனித்தின் மீதும், அவரது  குடும்பத்தின்  மீதும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரண்டு  புகார்களை அளித்ததாகவும்  அந்த  செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள  புனித், “என் மீதும்,குடும்பத்தின் மீதும் பதியப்பட்ட வழக்குகள் , நான் காவல்துறை அதிகாரி மீது அளித்த புகாரை வலுவிலக்க செய்யவே பதியப்பட்டுள்ளது. நான் அந்த இரண்டு வழக்குகளிலும் முன்ஜாமீன் பெற்றுள்ளேன். இதுபோன்ற முக்கியமான குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் சாதரணமாக சுதந்திரமாக அலைய முடியுமா? அவர் செல்வாக்கு மிக்கவர்,எனவே சாட்சிகளுக்கு அழுத்தம்  கொடுக்கக் கூடும்”  என்று  குறிபிட்டுள்ளதாகவும் அந்த  செய்தி  கூறுகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்