Aran Sei

விவசாய போராட்டத்தை பதிவிட்டதால் கணக்குகள் முடக்கம்: யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது ட்விட்டர்?

விவசாயிகளின் போராட்டத்தை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வந்த பலரின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற மன்தீப் புனியா என்ற சுயாதீன பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

`அரசியல்வாதிகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது எங்கள் பொறுப்பல்ல’ – ஃபேஸ்புக் நிறுவனம்

ஜனவரி 26-ம் தேதி அன்று விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணி தொடர்பாகக் கருத்து சொன்னதற்காகப் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் பிறர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி வயர் செய்தித் தளத்தின் ஆசிரியர் சித்தார்த்த வரதராஜன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலர் மீது தேச துரோக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்

இந்நிலையில், விவசாய போராட்டத்தில் நடக்கும் தினசரி நடவடிக்கைகளைத் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்திருந்த பலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் தனிநபரின் ட்விட்டர் கணக்குகள், குழுக்களின் கணக்குகள், செய்தி நிறுவனத்தின் கணக்குகள் ஆகியவை அடக்கம்.

திருடப்பட்ட ஃபேஸ்புக் பயனாளர்களின் செல்ஃபோன் எண்கள் – ஒரு எண் சுமார் 1500 ரூபாய்க்கு விற்பனை

விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பிலிருந்து போராட்டங்களில் நடக்கும் விஷயங்களை வெளிக் கொண்டு வந்த கேரவன் பத்திரிகையின் ட்விட்டர் பக்கம், டிராக்டர்2 ட்விட்டர் பக்கம், கிசான் ஏக்தா மோர்ச்சா ஆகிய பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ச்சியாகச் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வந்த கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது. இதற்குச் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து முடக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஃபேஸ்புக் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது கிசான் ஏக்தா மோர்ச்சா ட்விட்டரில் முடக்கப்பட்டுள்ளது.

கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் முடக்கம் – பாஜக கூட்டணியில் ஃபேஸ்புக் நிறுவனம்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முகமது சலீம், செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஜர்னெய்ல் சிங் மற்றும் ஆர்த்தி, பத்திரிகையாளர் சந்தீப் செளத்ரி, எழுத்தாளர் சஞ்சுக்தா பாசு, முகமது ஆசிஃப் கான், நடிகர் சுஷாந்த் சிங் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஃபேஸ்புக்கில் இருந்து அங்கி தாஸ் பதவி விலகல் : நாடாளுமன்ற விசாரணையின் எதிரொலியா?

இதில் ஆச்சரியமாகப் பிரசார் பாரதியின் முதன்மை செயல் அதிகாரி சஷி எஸ் வேம்பட்டியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. ஏஎல்டி நியூசைச் சேர்ந்த முகமது, முடக்கப்பட்டுள்ள அனைத்து கணக்குகளின் புகைப்படத்தையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் தளத்தில் செயல்பட்டு வந்த பல கணக்குகளை முடக்கியுள்ளது தொடர்பாக அந்நிறுவனம், சட்ட் ரீதியான கோரிக்கைகளை ஏற்று, நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி குறிப்பிட்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

15 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்: தனியுரிமை கொள்கையைத் தள்ளி வைத்த வாட்ஸ்அப் நிறுவனம்

ஒரு ட்விட்டர் கணக்கை முடக்க கோரி “ஒரு சட்ட அமலாக்கத்துறை அதிகாரி, அரசாங்க அதிகாரி அல்லது பிற மூன்றாம் தரப்பினர் (third party) சட்ட ரீதியாக முறையிடலாம்” என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது முடக்கப்பட்டுள்ள ட்விட்டர் கணக்குகளை வைத்திருந்தவர்களுக்கு லட்சங்களில் பின் தொடர்பவர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்