Aran Sei

பெருநகரங்களில் பசுக்களை பராமரிக்க விடுதி, விலங்குகளை துன்புறுத்தினால் தண்டனை – ஒன்றிய அரசு திட்டம்

பெருநகரங்களில் பசுக்களைப் பராமரிக்க விடுதி கட்டுவதற்கு ஒன்றிய அரசு திட்டம் வைத்துள்ளதாக ஒன்றிய அரசின் கால்நடைப் பராமரிப்பு, மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

உலக விலங்குகள் தினத்தையொட்டி, டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள காமதேனு கோசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர்,“விலங்குகளைத் துன்புறுத்துபவர்களுக்கு முதல்முறையாக தவறு செய்தால்கூட கடும் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவர உள்ளோம். ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த கூட்டத்தொடரில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்..

லக்கிம்பூர் வன்முறை: ‘ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்ய வேண்டும்’- திருமாவளவன் வலியுறுத்தல்

விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் ஓ.பி. சவுத்ரி பேசும்போது, “விலங்குகளைத் துன்புறுத்தி முதல்முறையாக சிக்குவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த ஆலோசித்து வருகிறோம், அதுமட்டுமல்லாமல் முதலமுறையாக தவறு செய்தாலே சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் செய்ய இருக்கிறோம்” என்று  கூறியுள்ளார்.

நகர்புறங்களில் அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் பசுக்களை வளர்க்க முடியாத சூழல் இருக்கிறது. ஆனால், பசுக்களை வளர்க்க விருப்பம் இருப்போருக்கு தனியாக பசு விடுதி தொடங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் பசுக்களை வாங்கி இங்குப் பராமரித்து வளர்க்கலாம். இதற்குதேவையான உதவிகளை அரசு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

‘ராம ராஜ்ஜியம் நடத்துவதாக கூறி, பாஜக படுகொலை ராஜ்ஜியம் நடத்துகிறது’ – மம்தா குற்றச்சாட்டு

அண்மைகாலமாக கோசாலைகளுக்கு வரும் நிதியுதவி குறைந்துள்ளது. இதை அதிகப்படுத்தத் தேவையான விழிப்புணர்வும் ஊக்கமும் மக்களுக்கு வழங்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் ஒரே வழி, பசு வளர்ப்புதான். ஆதலால், தீபாவளி, தசரா போன்ற பண்டிகை நாட்களில் பசு தொடர்பான பால் பொருட்களில் செய்த உணவுகளை அதிகமாக வாங்கியும், ஆதரவு கொடுத்தும் விவசாயிகளுக்கு வாழ்வு தர வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் ஓ.பி. சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Source: outlookindia

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்