Aran Sei

ஜேஎன்யு விடுதியில் அசைவ உணவு வழங்குவதை தடுத்த ஏபிவிபியினர் – இருதரப்பு மோதல்; 15 பேர் காயம்

டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ராமநவமியைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வார இறுதி நாட்களில் வழக்கமாக வழங்கப்படும் அசைவ உணவுகளை ஏபிவிபியினர் தடுத்துள்ளனர். இதற்கு இடதுசாரி மாணவர் குழு எதிர்வினையாற்றியுள்ளது. அப்போது நடைபெற்ற மோதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காவேரி விடுதியில் ராமநவமியைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூஜையைக் காரணம் காட்டி, வாரயிறுதியில் அமைக்கப்பட்ட மெனுவின்படி அசைவ உணவுகளை சமைக்க ஏபிவிபி அனுமதிப்பதில்லை என்று இடதுசாரி மாணவர் குழு குற்றம் சாட்டியது.

கர்நாடகா: இஸ்லாமிய வியாபாரிகளின் பழக் கடைகளைச் சேதப்படுத்திய வலதுசாரிகள் – காவல்துறை வழக்கு பதிவு

இதை எதிர்த்த இடதுசாரி மாணவர் அமைப்பினர், “ஜேஎன்யு மற்றும் அதன் விடுதிகள் அனைவருக்கும் பொதுவான இடமாகும். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சொந்தமானது இல்லை” என்று கூறியுள்ளனர்.

இதற்கு எதிர்வினையாற்றிய ஏபிவிபி அமைப்பினர், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் விடுதியில் பூஜை ஏற்பாடு செய்வதைத் தடுக்க முயன்றனர் என்று குற்றம்சாட்டினர். சில மாணவர்கள், ராமநவமியை முன்னிட்டு மாலை3.30 மணிக்கு காவிரி விடுதியில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.  மாணவர் விடுதியில் மத வழிபாடு நடத்தக் கூடாது என்று இடதுசாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்கியதாகவும் மாணவர்களை காயப்படுத்தியதாகவும் மாறி மாறி குற்றம்சாட்டினர்.

கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்ற இஸ்லாமிய வியாபாரியை தாக்கிய வழக்கு: பஜ்ரங் தள் உறுப்பினர்கள் 5 பேர் கைது

வன்முறை குறித்து பேசிய இடதுசாரி மாணவர் அமைப்பினர், “அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷித் உறுப்பினர்கள் உணவு விடுதியில் அசைவ உணவுகளை வழங்க விடாமல் தடுத்து வன்முறைத் தாக்குதலில் ஈடுப்படனர். இதில் சில மாணவர்கள் காமடைந்துள்ளனர். ஏபிவிபியினர் விடுதி செயலாரையும் தாக்கி உள்ளனர். அவர்கள் இரவு உணவு மெனுவை மாற்றவும், அதில் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மெஸ் கமிட்டியில் உள்ளவர்களைத் தாக்கினர்” என்று தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பல்கலைகழக  வளாகத்திற்கு காவல்துறையினர்  வரவழைக்கப்பட்டனர். இந்தக் கலவரத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள்  சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலருக்கு நெற்றியில் காயங்கள், தையல்கள் போடப்பட்டுள்ளன. யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை.

ஹலால் இறைச்சி குறித்த பாஜகவின் சர்ச்சை கருத்து – கர்நாடகாவை உ.பி., ஆகுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

மோதலில் காயமடைந்த ஜேஎன்யு மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.என்.பாலாஜி கூறுகையில், “ஏபிவிபி மாணவர்களை டியூப் லைட்டுகளால் தாக்கினர், பெரிய கற்கள், பெரிய பாத்திரங்களின் மூடிகளை எங்கள் மீது வீசினர். பாதுகாப்பு, நிர்வாக அதிகாரிகளை அழைக்க முயற்சித்தேன், ஆனால் யாரும் உதவி செய்ய வரவில்லை” என்று தெரிவித்துள்ளார். ஜேஎன்யு மாணவர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் ஐஷே கோஷ் கூறுகையில், “மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர், அதே நேரத்தில் டெல்லி காவல்துறை மற்றும் ஜேஎன்யு நிர்வாகம் மீண்டும் வாய்மூடி பார்வையாளர்களாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

காயமடைந்த மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின்படி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படும். சாட்சிகளின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்று காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Source: timesofindia

மொழிக்கலவரத்தை தூண்டும் அமித்ஷா. மதுகூர் ராமலிங்கம் விலாசல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்