Aran Sei

ஏபிவிபி தலைவர் மீது பாலியல் வழக்கு: பிணை கிடைத்ததை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டி கொண்டாடியதை கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏபிவிபி தலைவர் ஷுபாங் கோண்டியாவிற்கு பிணை கிடைத்தத்தை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டிக் கொண்டாடியதை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அசைவ உணவுக்கு தடைவிதித்து ஜேஎன்யு விடுதி மாணவர்களைத் தாக்கிய ஏபிவிபியினர் – காவல்துறை வழக்கு பதிவு

மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ”ஏபிவிபி தலைவர் ஷுபாங் கோண்டியா என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தார். என் கருவை கலைத்தார்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இது சம்பந்தமான வழக்கில் ஷுபாங் கோண்டியாவிற்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த நவம்பரில் பிணை வழங்கியது.

இந்நிலையில், ஷுபாங் கோண்டியாவின் பிணையை வரவேற்று ‘பையா இஸ் பேக்’  என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதைச் சுட்டி காட்டி வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யுமாறு பாதிக்கப்பட்ட பெண் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

கர்நாடகா: ஹிஜாப் அணிந்தவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்த ஏபிவிபி மாணவர்கள்; மாணவிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. “என்ன இது ‘பையா இஸ் பேக்’?. இந்த ஒரு வாரம் உங்கள் பையாவை கவனமாக இருக்குமாறு சொல்லுங்கள்” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், பாலியல் வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்ட ஷுபாங் கோண்டியாவின் பிணையை நாங்கள் ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேள்வி கேட்டு அவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், மத்தியப் பிரதேச அரசின் பதிலையும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

பத்திரிகையாளருக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த ஏபிவிபி உறுப்பினர் : கைது செய்த ராஜஸ்தான் காவல்துறை

மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

Source : NDTV

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு துணிச்சல் மிக்க தமிழன்..

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சங்கத்தமிழன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்