Aran Sei

கர்நாடக உள்துறை அமைச்சர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் – ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 30 மாணவர்கள் கைது

Credit: The Hindu

ர்நாடக மாநில அரசின் உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திராவின் அதிகாரப்பூர்வ வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்த முயன்ற ஏபிவிபி அமைப்பின் 30 உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாநிலத்தில் நடைபெற்று வரும் இந்துத்துவ செயல்பாட்டாளர்களின் கொலை தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்கள்மீது தடை விதிக்க கோரி போராட்டம் நடத்தினர்.

அண்மையில் பாஜக உறுப்பினர் பிரவீன் நெத்தாரு கொல்ப்பட்டார். இது தொடர்பாக கட்சியின் இளைஞர் பிரிவு யுவ மோர்ச்சாவின் சமூக ஊடகப் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

லக்னோ: காசி விஸ்வநாதர் கோவில் குறித்து தலித் பேராசிரியர் கருத்து – ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு ஏபிவிபியினர் போராட்டம்

இந்நிலையில், தற்போது ஏபிவிபி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் வந்தபோது அமைச்சர் ஞானேந்திரா வீட்டில் இல்லை. அவர்கள் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் அத்துமீறி உள்ளே நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்துத்துவா செயல்பாட்டாளர்களின் கொலைகளில் குற்றவாளிகளுக்கு எதிராக செயலற்ற தன்மையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அவர்கள்மீது வழக்கு பதிவு செய்த ஜெ.சி. நகர் காவல்துறையினர், அவர்களை அனைவரையும் கைது செய்துள்ளனர்.

உ.பி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இப்தார் விருந்து: ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி போராட்டம்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஞானேந்திரா, “ஏபிவிபி உறுப்பினர்களின் வேதனையை புரிந்துகொண்டதாகவும் விரைவில் அவர்களை தானே அழைத்து சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாபுலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களை தடை செய்வது குறித்து அரசு சிந்தித்து வருவதாக  ஞானேந்திரா கூறியுள்ளார்.

Source: The Hindu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்