Aran Sei

உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் நேரும் முறைகேடு: கௌரவ விரிவுரையாளர் சங்கம் குற்றச்சாட்டு

2019 ஆம் ஆண்டில் அறிவித்த கல்லூரி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் அதை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களை முறைகேடாக பணி அமர்த்தும் தமிழக உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும், இது பெரும் ஆபத்தை உருவாக்க உள்ளதாக கூறி அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரி தற்காலிக பேராசிரியர் சங்கம் மற்றும்  பகுஜன் பேராசிரியர்கள் சங்கம்  கண்டித்து அறிக்கை வெளிடிட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூர்களில்15 முதல் 10 ஆண்டுகளாக பணிபுரியும் கெளவர விரிவுரையாளர்களை கவனத்தில் கொள்ளாமல் இவர்களுக்கு மட்டும்  பணி வழங்க அவசரம் காட்டுவது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தலையில் சுமைகளுடன் போராட்ட களத்தில் திரளும் பெண்கள் – விவசாயிகள் போராட்டத்தின் மற்றொரு மையமாகும் மும்பை

மேலும், ஏற்கனவே அறிவித்துள்ள காலி பணியிடங்களை தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்ப வேண்டுவதாகவும் இல்லை என்றால் அரசு அறிவித்த வயது அடிப்படை கொண்டு நிரப்பிட வேண்டுவதாகவும் கௌரவ பேராசிரியர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தையும் பரிசீலினை  செய்யாமல் அரசு முடிவு எடுக்குமானால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரி தற்காலிக பேராசிரியர் சங்கம் மற்றும்  பகுஜன் பேராசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு – ‘வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டுள்ளது’ – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்

மேலும், யுஜிசி தகுதி பெற்று பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி சம்பளம் கேட்டு  தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ  சங்கத்தின்  மாநில தலைவர்  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் (filling number 22.12.2020) வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் அரசிடம் விளக்கம் கேட்டு வழக்கினை வருகின்ற 12.02.2021 தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். கௌரவ விரிவுரையாளர்களின்  யுஜிசி அடிப்படை சம்பளம் கேட்டு தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யூஜிசி தகுதி பெற்ற கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பாக தொடர்ந்த வழக்கு அடுத்த மாதம் நீதிமன்ற தீர்ப்புக்காகவும் அரசின் பதிலுக்காகவும் காத்திருப்பதாக கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்