Aran Sei

பஞ்சாபில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்ட விவகாரம் – 3 விவசாயிகளை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு

ஞ்சாப் மாநிலத்தில் பாஜக கட்சியைச் சார்ந்த அபோஹர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரை அமர்வு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

பாஜக எம்.எல்.ஏ அருண் நராங் தாக்கப்பட்ட விவகாரம் – விவசாய தலைவர்கள் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிந்த காவல்துறை

முக்சார் மாவட்டம் மாலூட் என்ற இடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிற்கு அருண் நராங் வருகை புரிந்தபோது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் அவரைத் தாக்கியுள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் அவர் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்ததோடு அவர்மீது கருப்பு மை ஊற்றப்பட்டது.

இது தொடர்பாக அடையாளம் தெரியாத 200 பேர் உட்பட பாரதிய கிசான் சங்கம் (சித்துபூர்) உறுப்பினர் நிர்மல் சிங் ஜசெனா, பாரதி கிசான் சங்கம் சிதுப்பூர் மாவட்ட தலைவர் சுக்தேவ் சிங் புராபுஜார் உட்பட ஏழு பேர்மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரும் விவசாயிகள்: 100 இடங்களில் 180 நாட்களை கடந்து தொடரும் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307, 353, 186, 188, 332, 323, 342, 506, 148 மற்றும் 149 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 4 விவசாயிகளில் மூவரை விடுவித்து மலோத் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘தலித்துகள், ஆதிவாசிகளுடன் நாடாளுமன்றம் நோக்கி பேரணி; டெல்லியில் அறுவடை திருவிழா’ : விவசாயிகளின் அடுத்த திட்டங்கள்

மேலும், இந்த வழக்கு தொடர்பாக விவசாய சங்க பிரிதிநிதிகள் உட்பட 21 பேர் நீதிமன்றத்தில்  சரணடைந்துள்ளனர்.

SOURCE; THE INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்