Aran Sei

‘காவல்துறையை வைத்து பத்திரிகை சுதந்திரத்தை தஞ்சை திமுக முடக்குகிறது’ – அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் குற்றச்சாட்டு

ஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு இயக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் முகநூல் பக்கத்தை 37ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், நேற்று (மே 6), அதிரை எக்ஸ்பிரஸ் பக்கத்தில், ‘அதிரையில் குடிநீரை குடிப்பதுபோல் நடித்த ஆளுமைகள்’ என்ற தலைப்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்காணொளியில், அதிராம்பட்டினம் 3ஆவது வார்டு சுரைக்காய்க்கொல்லை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியிலிருந்து வந்த குடிநீரை நகர்மன்ற தலைவர் எம்.எம்.எஸ்.தாஹிரா அம்மாளின் கணவர் எம்.எம்.எஸ்.அப்துல் கரீம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளனர்.

அப்போது, துணை தலைவரும் திமுக நகர செயலாளருமான இராம.குணசேகரன் உள்ளிட்டோர் குடிநீரை வாயில் வைத்து விட்டு, கீழே துப்புவது அக்காணொளியில் பதிவாகியுள்ளது.

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பிற்கு உடன்படுகிறதா திமுக? – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேள்வி

இந்நிலையில், அதிரை எக்ஸ்பிரஸ் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக கூறி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அதிரை எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த பொய் புகாரை இராம.குணசேகரன் அளித்துள்ளார்.  அதனடிப்படையில், காவல் நிலையத்திலிருந்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரை தொடர்புக்கொண்ட அதிகாரி ஒருவர், புகார் விவரம் குறித்து ஏதும் தெரிவிக்காமல் காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளார். மேலும் விவரம் கேட்டதற்கு அந்த அதிகாரி விவரம் ஏதும் கூறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கும் சட்டமன்றத்திற்கும் கடவுளின் அருள் கிடைத்திருக்கிறது – அமைச்சர் சேகர் பாபு

“இதனையடுத்து காவல் நிலையம் சென்ற அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்களை மிரட்டும் தொனியில் உள்ளூர் திமுக-வினர் கூச்சலிட்டு பேசினர். அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில்  ஆளுமைகள் என்ற உயரிய வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அவற்றை திரித்து பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக உள்ளூர் திமுக பிரமுகர்கள் காவல்துறையை பயன்படுத்தி மிரட்டும் தொனியில் செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதனை சட்டப்படி எதிர்கொள்ள அதிரை எக்ஸ்பிரஸ் தயாராக உள்ளது” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் இத்தகைய நபர்கள் மீது துறை ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிரை எக்ஸ்பிரஸ்  கேட்டுக்கொண்டுள்ளது.

நாயன்மார்களே பல்லக்குள போகல உங்களுக்கு என்ன? | Surya Xavier Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்