ராமர் கோவில் அறக்கட்டளையின் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி குறித்து விசாரணை நடத்தக் கோரி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, சஞ்சய் சிங் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில், “இந்த ஊழலுக்கு காரணமான அனைவரையும் கடவுள் ராமரின் பெயரில் தண்டிக்குமாறு நான் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். குற்றவாளிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்ப வேண்டும். அவர்களின் வங்கி கணக்குகள் விசாரணை உட்படுத்தப்பட்டு, எப்படி அரசின் நிலங்களை அவர்கள் அறக்கட்டளைக்கு கோடிகளுக்கு விற்றார்கள் என்று அம்பலப்படுத்த வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ராமர் கோயில் நிர்வாகம் – அவிழும் உண்மைகள்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங், “நீங்கள் (பாஜக) என்னை தாக்க வேண்டும் என்ற திட்டங்களை வைத்திருந்தாலும் எனக்கு கவலையில்லை. ராமரின் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் முன் உண்மையை வெளிக்கொணர்வதிலிருந்து இருந்து என்னை யாரும் தடுக்க முடியாது. எங்கள் கோரிக்கை என்னவென்றால், பாஜகவும் அறக்கட்டளையும் கோடிக்கணக்கான இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பிய பின்னரே அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
Source; newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.