Aran Sei

‘கொரோனா உயிரிழப்பை தடுக்க டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி’ – ஆம் ஆத்மி எம்எல்ஏவின் கருத்தை வழிமொழியும் பாஜக

டெல்லியில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டபேரவை உறுப்பினர் ஷோயிப் இக்பால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 30), ஷோயிப் இக்பால் வெளியிட்ட காணொளியில், “டெல்லியின் இத்துயர் நிலைமையால் நான் மிகவும் வேதனை அடைந்திருக்கிறேன். மிகுந்த கவலையுற்ற என்னால் தூங்க முடியவில்லை. மக்களுக்கு ஆக்ஸிஜனும் மருந்துகளும் கிடைக்கவில்லை. என் நண்பரும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்.  மருத்துவமனையில் இருக்கும் அவருக்கு ஆக்ஸிஜனோ, வெண்டிலேட்டரோ கிடைக்கவில்லை. அவருக்கு ரெம்தேசிவிர் மருந்து வாங்குவதற்கான மருந்து சீட்டு என்னிடம் உள்ளது. ஆனால், அதை எங்கு வாங்குவது? அவரின் பிள்ளைகள் அலைந்துக்கொண்டிருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை பரவல்: மோடி தான் முக்கிய குற்றவாளி – சர்வதேச ஊடகங்கள் குற்றச்சாட்டு

“நான் ஆறு முறை சட்டபேரவை உறுப்பினராக இருந்தவன். மூத்த அரசியல்வாதி. ஆனால், அப்படி இருந்தபோதிலும், என்னால் எந்த அதிகாரியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இல்லாதுபோனால், சாலைகளெங்கும் இறந்த உடல்கள் மட்டுமே கிடக்கும்.” என்று அவர் கூறியுள்ளார்.

பாஜகவின் டெல்லி மாநில செய்தித்தொடர்பாளர் ஹரிஷ் குரானா, “இந்த மோசமான சூழலில் குடியரசு ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று அவர் சொல்வது சரிதான். டெல்லி இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் நிலைமையை கையாள முடியாததால் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.” என்று  தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஆளுனருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் நிறைவேற்றம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல்

நேற்று முன் தினம் (ஏப்ரல் 28), டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் தரும் தேசிய தலைநகர் டெல்லி சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்தச் சட்டதிருத்தத்தின் படி டெல்லியில் அரசு என்பது மாநில ஆளுநரையே குறிக்கும், டெல்லி முதலமைச்சர் எந்த முடிவை எடுக்க வேண்டுமானாலும் ஆளுநரின் ஒப்புதல் கோர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்