உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவை ஏற்பாடு செய்ததில் ஊழல் நடைபெற்று இருப்பதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.
தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையை மேற்கொள் காட்டி இந்த குற்றச்சாட்டை அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் உத்திரபிரதேச பொறுப்பாளர் சஞ்சய் சிங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 2,700 கோடியில் முறைகேடு நடந்துள்ளது.” என கூறியுள்ளார்.
இந்த நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட 32 டிராக்டர்கள் கார்கள், மொபெட்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையில் பதியப்பட்டுள்ளது சிஏஜி அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது ஒரு சிறிய உதாரணம் தான், இதன் அடிப்படையில் கும்பமேளாவின் பெயரில் எவ்வளவு ஊழல் நடைபெற்றுள்ளது என்பதை நீங்கள் யுகிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
”அயோத்தியில் ராமர் கோவிலாக இருந்தாலும், அலகாபாத்தின் கும்பமேளாவாக இருந்தாலும், ஊழலில் ஈடுபடுவதற்கான எந்த வாய்ப்பையும் பாஜக விடுவதில்லை. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜகவிடம், குறைந்தபட்சம் மதத்தை விட்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மக்கள் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் சரியான நேரத்தில் பதிலளிப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.
சிஏஜியின் அறிக்கையின்படி, 2019 கும்பமேளாவின் தணிக்கையில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாய் செலவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.