Aran Sei

மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு – போராட களமிறங்கும் ஆம்ஆத்மி கட்சி

டெல்லி அரசின் உரிமைகளைப் பறிக்கும் சட்டத்திற்கு எதிராக நாளை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி அரசின் அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு வழங்கும் மசோதா: ஆம் ஆத்மி கடும் கண்டனம்

இந்தப் போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையேற்று நடத்தவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள டெல்லி தலைநகர் மசோதா 2021 ன் படி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட டெல்லி அரசு எந்த முடிவை எடுக்க வேண்டுமானாலும் துணைநிலை ஆளுனர் கருத்து கேட்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

வருகின்ற தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி 6 மாநிலங்களில் போட்டியிடும்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த கோபால் ராய் , “டெல்லி குறித்த இந்த மசோதா சட்டவிரோதமானது ” என்று குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’டெல்லியில் ராமராஜ்யம் அமைக்க போராடி வரும் ஆம் ஆத்மி’ – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் “மக்களால் தேந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை இந்தச் சட்டத்தின் வழியே மத்திய அரசு பறிக்கிறது ” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்