Aran Sei

எங்கள் அனுமதியில்லாமல் ஆகர் பட்டேல் வெளிநாடு செல்ல கூடாது – சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

Credit: The Indian Express

சிபிஐயிடம் அனுமதி பெறாமல், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா பிரிவின் முன்னாள் தலைவர் ஆகர் பட்டேல் வெளிநாடு செல்ல முடியாது என்று சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் இருந்து அமெரிக்கா செல்வதற்காக கெம்பேகவுடா விமான நிலையம் வந்த ஆகர் பட்டேல் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருப்பதாகவும் அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில், ஆகர் பட்டேல் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த கூடுதல் முதன்மை அமர்வு நீதிபதி பவன் குமார், “ஆகர் பட்டேலுக்கு எதிராக வழங்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்வதோடு அவரிடம் சிபிஐ இயக்குநர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

மேலும், ஆகர் பட்டேலிடம் சிபிஐ இயக்குநர் மன்னிப்பு கோருவது பொது மக்களிடையே சிபிஐயின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று நீதிபதி கூறியிருந்தார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு விலை குறைப்பு – அதார் பூனாவாலா அறிவிப்பு

டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவை  எதிர்த்து சிபிஐ தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவதற்கான சிபிஐயின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஐக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் அவதானிப்புகளின் அடிப்படையில் இருப்பதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும்.” என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி சந்தோஷ் சிநேகி மான், “சிபிஐ இயக்குநர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவை நிறுத்தி வைத்ததோடு, சிபிஐயின் அனுமதியில்லாமல் ஆகர் பட்டேல் வெளிநாடு செல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம்: இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று பேசிய சாமியார்மீது வழக்கு பதிவு

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரிவு மீது சிபிஐ பதிந்துள்ள வழக்கில் ஆகர் பட்டேலுக்கு எதிராக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Source: The Indian Express

தமிழ் அணங்கு

ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த ஓவியம்.  ஓவியர் சந்தோஷ் நாராயணனின் நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்