Aran Sei

‘1300 கோடி சொத்துக்களை 500 கோடிக்கு அதானியிடம் விற்ற ஒன்றிய அரசு’ – விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

மூன்று விமான நிலையத்திற்கு சொந்தமான 1300 கோடி மதிப்பிலான சொத்துக்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு (ஏஇஎல்) 500 கோடிக்கு இந்திய விமானநிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) விற்பனை செய்திருப்பதாக விமான நிலையங்கள் ஆணைய ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இம்மூன்று விமான நிலையங்களும் அதானி நிறுவனம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு விமான நிலையங்கள் ஆணைய ஊழியர்கள் சங்கம் எழுதியிருக்கும் கடிதத்தில், ”மங்களூரு, லக்னோ, அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களை அம்பானி நிறுவனம் கடந்த ஆண்டு குத்தகைக்கு எடுத்தது. இந்த விமான நிலையத்தின் சொத்துக்கள் ரூ 1300 கோடி என ‘அரசு சொத்துக்களை தனியார் மயமாக்க அமைக்கப்பட்ட குழு (Public Private Partnership Appraisal Committee)’ மதிப்பிட்ட நிலையில், அது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு (ஏஇஎல்) வெறும் 500 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 2018ல் ஆறு விமான நிலையங்களைக் குத்தகைக்கு விட இந்திய விமானநிலையங்கள் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான அதிகபட்ச தொகையை அதானியின் ஏஇஎல் நிறுவனம் கோரியதாக பிப்ரவரி 2019ல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள ஆறு விமான நிலையங்களில் மூன்று விமான நிலையங்கள் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா காரணமாக தாமதமான மீதமிருக்கும் மூன்று விமான நிலையங்கள் இந்த மாதம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

லக்கிம்பூர் வன்முறை – அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியிட்ட பாஜக எம்.பி. வருண் காந்தி

இந்த நிதியாண்டில் முதல் முறையாக இழப்பு ஏற்படுள்ளதாக ஏஏஐ தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ. 1,985 கோடி லாபம் கிடைத்த நிலையில், இந்த நிதியாண்டில் இதுவரை ரூ. 2,814 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஏஏஐ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் இருந்து ஆறு மாதத்திற்கு ஊதியத்தில் பிடித்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2020ல் லக்னோ, மங்களூரு, அகமதாபாத் விமான நிலையம் குத்தகை தொடர்பாக அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் ஏஏஐ இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களின்படி, மூன்று விமான நிலையங்களின் சொத்துக்கள் ரூ. 74.5கோடி, ரூ. 147 கோடி மற்றும் ரூ. 277 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 90 வேலை நாட்களுக்குள் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பண்டோரா பேப்பர்ஸ் தகவல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் – ஒன்றிய அரசு அறிவிப்பு

பிபிஏசியிடம் ஒன்றிய விமான போக்குவரத்து துறை பெறப்பட்ட மதிப்பீடு ஒப்புதலின்படி, மங்களூரு விமான நிலையத்தின் சொத்துக்கள் 80 விழுக்காடு நட்டத்திலும், லக்னோ விமான நிலைய சொத்துக்கள் 75 விழுக்காடு நட்டத்திலும், அகமதாபாத் விமான நிலையத்தின் சொத்துக்கள் 28 விழுக்காடு நட்டத்திலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 11, 2018 ஆம் தேதி நடைபெற்ற பிபிஏசியின் 85வது கூட்டத்தின் விவாத கூட்டத்தில், மங்களூரு, லக்னோ, அகமதாபாத் விமான நிலையத்தின் சொத்துக்கள் முறையே ரூ. 383 கோடி, ரூ. 583 கோடி, ரூ. 384 கோடி என மதிப்பட்டுள்ளது.

‘அஞ்சல் துறை படிவத்தில் தமிழ் அகற்றம்; மாற்றங்களை செய்க’ – பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் கடிதம்

இது தொடர்பாக கேட்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ள அதானி குழுமம், ஆறு விமான நிலையங்களின் ஏல ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்