Aran Sei

முறைகேடாக விற்கப்படும் ஆதார் தகவல்கள் – சட்டவிரோதமானதல்ல என வழக்கை திரும்பபெற்ற காவல்துறை

ஆதார் தகவல்கள் விற்கப்படுவது குறித்து புலனாய்வு செய்தி வெளியிட்ட தி டிரிபியூன் (The tribune) பத்திரிக்கைமீதான வழக்கைத் திரும்பப்பெறுவதாக டெல்லி குற்றவியல் காவல்பிரிவு  தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்காளர்களின் ஆதார் தகவலை முறைகேடு செய்ததாக பாஜக மீது புகார்: தேர்தலை தள்ளி வைக்கலாமா என நீதிமன்றம் கேள்வி

கடந்த ஜனவரி 3 2018 அன்று,  கைரா என்பவர் ரூபாய் 500 செலுத்தினாலே ஆதார் அட்டை பெற்றுள்ள கோடிக்கணக்கானவர்களின் தகவல்களை எளிதாகப் பெற முடிகிறது எனக் கூறியதை  தி டிரிபியூன் பத்திரிக்கையில் “ஆதார் விற்பனைக்கு”  என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், முகவர் ஒருவரிடம் 500 ரூபாய் செலுத்துவதன் வாயிலாக  தொலைபேசி எண், முகவரி, புகைப்படம், பிறந்ததேதி, மின்னஞ்சல் என ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெற முடிகிறது எனவும் பத்திரிகையாளர் கைரா குறிப்பிட்டிருந்ததாக தி வயர் செய்தி கூறுகிறது.

ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத 3 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து- மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

 

இதுகுறித்து கடந்த ஜனவரி 5 2018 அன்று, கைரா உட்பட மூவர் மீது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சார்பில் முறைகேடாக ஆதார் தகவல்களைத் திருடியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 419,420,468,471 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் ஆதார் சட்டத்தின் பிரிவு 36/37 ன் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது.

நிலமோசடியை தடுக்க நிலங்களுக்கு 14 இலக்க அடையாள எண் – மத்திய அரசு அறிவிப்பு

 

மேலும் இந்தப் புகாரின் மீதான விசாரணையின்போது  சூரத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சேர்ந்த அலுவலரின் உள்நுழைவு(login id) மூலம் முறைகேடாக ஆதார் இணைதள தகவல்கள் விற்கப்பட்டதாகத்  தெரியவந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது ஆதார் இணையத்தின் அதிகாரிகளின் உள்நுழைவு(login id) தகவல்களைப் பகிர்வது சட்டவிரோதமானதல்ல என்று கூறி  டெல்லி குற்றவியல் காவல் பிரிவு, இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளதாக தி வயர் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்