Aran Sei

கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த அமெரிக்க ஜனநாயக கட்சி உறுப்பினர் – கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

கொரோனா தடுப்பூசிகள் மற்றும் முககவசங்களுக்கு எதிராக பேசி வந்த அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஸ்காட் அப்லி கொரோனாவால் உயிரிழந்தார்.

45 வயதான ஸ்காஸ் அப்லி  கொரோனா தடுப்பூசிகள் பலனளிக்காது என்றும், முககவசங்கள் தேவையில்லை என்றும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுதி வந்தார்.

கடந்த மாதம் பால்டிமோரின் முன்னாள் சுகாதார ஆணையர், ”கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில், ஃபைசரின் தடுப்பூசி குறைந்தபட்சமாக ஆறு மாதங்கள் வரை பயனுள்ளதாக இருக்கும் என்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்திருக்கிறது” என பதிவிட்டிருந்தார்.

கொரோனா தடுப்பூசி – 12 நாட்களில் 9 பேர் உயிரிழப்பு – ” வெளிப்படைத்தன்மை வேண்டும் “

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஸ்காட் அப்லி, “நீங்கள் சுதந்திர மக்களின் எதிரி” என குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு தினங்களுக்கு முன்பாக நிமோனியா நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்காட் அப்லிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை அவர் உயிரிழந்துவிட்டதாக, அவரது கட்சியின் உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

Source : The Washington Post

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்