இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தாலிபன்கள் நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பு[FIEO] தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பின் இயக்குனர் அஜய் சஹாய், “பாகிஸ்தான் வழியிலான சரக்குப் போக்குவரத்தை தாலிபன்கள் தடை செய்திருப்பதால் அந்த வழியிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தியா ஆப்கானிஸ்தானில் பெருமளவு வணிகம் செய்யவில்லை என்றாலும் குறிப்பிடத்தகுந்த அளவில் முதலீடு செய்துள்ளது என்றும், தற்போது 400-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன, அவற்றில் சில தற்போது நடந்து கொண்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது, கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு 835 மில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளதாகவும், 51௦ மில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதியும் செய்துள்ளதாகவும் இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பின் இயக்குனர் அஜய் சஹாய் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா ஆப்கானிஸ்தானில் 3 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
source:தி மின்ட்
தொடர்புடைய பதிவுகள்:
விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலி – மூடப்பட்ட அதானி நிறுவனமும் மக்கள் போராட்டமும்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.