Aran Sei

அக்.2இல் தமிழகம் முழுதும் விடுதலைச் சிறுத்தைகளின் சமூக நல்லிணக்க பேரணி நடைபெறும் – திருமாவளவன் அறிவிப்பு

காத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், காந்தியடிகளை சுட்டுக் கொன்ற பாசிச சக்திகள் இன்று இந்தியா முழுவதும் காந்தியடிகளை ஓரங்கட்ட கூடிய வகையில் வரலாற்றில் இருந்து அப்புறப் படுத்தக் கூடிய வகையில் அவருக்கு எதிரான சமூக விரோத சக்திகளை எல்லாம் உயர்த்தி படிக்கிற போக்குகள் தலைவிரித்து ஆடுகிறது.  அது மிகவும் அதிர்ச்சியை தருகிறது.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

காந்தியடிகளுக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் நேரடியான கருத்து மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இன்றைக்கு வரலாற்றில் மிக முக்கியமான நாள்; பூனா ஒப்பந்த நாள். காந்தியடிகளும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் ஏர்வாடா சிறையில் தொடர்ச்சியாக நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக தான் பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த பூனா ஒப்பந்தம் புரட்சியாளர் அம்பேத்கருடைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. அவருடைய கனவுகளை சிதைத்தது என்பதுதான் வரலாற்று உண்மை. அப்படி நேரடியாக காந்தியடிகளுக்கும் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் கருத்தியல் முரண்பாடுகள் இருந்தாலும் காந்தியடிகள் இந்திய மண்ணின் விடுதலைக்கு தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் என்பதை உலகம் அறியும்.

அப்படிப்பட்ட ஒரு விடுதலை போராட்ட வீரரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் கொச்சைப்படுத்துவதும் வரலாற்றில் இருந்து அவரை இருட்டடிப்பு செய்வதுமான முயற்சியில் ஈடுபடுவதும் வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது.

கரூர்: சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறது – பட்டியல் சமூக ஊராட்சி மன்ற தலைவர் காவல்நிலையத்தில் புகார்

காந்தியடிகளின் பிறந்த நாளன்று தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை நடத்த அனுமதி கேட்டு இருக்கிறார்கள். உயர் நீதிமன்றமும் அனுமதி வழங்கலாம் என்று சொல்லி இருக்கிறது. இது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு  மேல்முறையீடு செய்ய வேண்டும். பாரதிய ஜனதா  கட்சி அணிவகுப்பு நடத்துவது வேறு; ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவது வேறு;

கருத்தில் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸும் பாஜகவும் ஒன்றுதான் என்பதற்கு யாருக்கும் மாற்று கருத்து இல்லை.  ஆர்எஸ்எஸ் தான் பாஜக; பாஜகதான் ஆர்எஸ்எஸ் என்றாலும் ஆர்எஸ்எஸ் நேரடியாக தமிழகத்தில் அவர்களின் ஆயுதங்களை ஏந்தியவாறு; காவி கொடியை ஏந்தியவாறு; மதவேறியை தூண்டும் வகையிலான முழக்கங்களை எழுப்பியவாறு தமிழ்நாட்டில் பேரணி நடத்தினால் அந்த நாள் தமிழக அரசியலில் கறுப்பு நாளாக அமையும்.

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை தமிழக அரசு தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது அதனால் அனுமதி அளித்து விட்டோம் என்று சாக்குப் போக்கு சொல்லி அனுமதி வழங்க கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுகிறது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதற்கு உடனடியாக தீர்வு கண்டு காவல்துறைக்கு வழிகாட்ட வேண்டும்.

சோதனை எனும் பெயரில் இஸ்லாமிய அமைப்புகளை ஒடுக்கும் ஒன்றிய அரசு – வைகோ கண்டனம்

காவல்துறையிலும் ஆர்எஸ்எஸ்காரர்கள் ஊடுருவி இருக்கிறார்கள்; எல்லாத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் பாசிஸ்டுகள் ஊடுருவி இருக்கிறார்கள். இது யூகம் அல்ல உண்மை. ஆகவே தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளை தேர்வு செய்து ஆர்.எஸ்.எஸ்காரர்கள் தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்கு தூபமிட பார்க்கிறார்கள். அதை முன்கூட்டியே முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Swiggy Employees Protest Over Revised Pay Structure| Swiggy Protest | Swiggy Food Delivery Workers

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்