Aran Sei

“என் விமர்சனம் முதலமைச்சரை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்” – ஆ.ராசா

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமியின் அரசியல் ஆளுமை பற்றிதான் விளக்கம் கொடுத்தேன் என்றும் என்னுடைய பேச்சால் முதல்வர் பழனிசாமி காயம் பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

அண்மையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலனை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்ட திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா முதலமைச்சர் பழனிசாமி குறித்து பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது.

அக்காணொளியில், முதல்வர் எடப்பாடி மற்றும் அவரது தாயாரை இழிவாக பேசியதாக, ஆ.ராசா மீது அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்  தங்களது கண்டனங்களைத் தெரிவித்தன. அதிமுகவினர் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

‘ஜெயலலிதா ஊழலை நிரூபிக்க வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி’ – ஆ.ராசா

மேலும், முதல்வர் பழனிசாமி மீது அவதூறு பரப்பும் விதத்தில் பேசியதாக அதிமுக கொடுத்த புகாரின் பெயரில், ஆ.ராசா மீது சென்னை காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மறுபுறம், இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமிளத்த ஆ.ராசா, எனது கருத்து வெட்டப்பட்டு தவறாக திரித்துக் காட்டப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சியினர் பேச்சில் கண்ணியம் காக்க வேண்டும் அதனை மீறக் கூடாது என்றும் எச்சரித்திருந்தார்.

`அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கியது வன்மப் போக்கின் தொடர்ச்சி’ – ஆ.ராசா கண்டனம்

இந்நிலையில், இன்று (மார்ச் 29)  நீலகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆ.ராசா, “என்னுடைய பேச்சு தனி மனித விமர்சனம் இல்லை. பொதுவாழ்வில் உள்ள இரண்டு ஆளுமைகளைக் குறித்த என்னுடைய மதிப்பீடு மட்டும்தான். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்யவில்லை.” என்று விளக்கமளித்துள்ளார்.

என்னால் முதல்வர் கண்கலங்கினார் என்பதை கேட்டு மனம் வேதனை அடைந்தேன் என்றும் என்னுடைய பேச்சால் முதல்வர் உள்ளபடியே காயப்பட்டு இருந்தால் என் மனம் திறந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்