Aran Sei

நடைமுறைக்கு வந்த 10% இடஒதுக்கீடு – அரசாணை வெளியிட்ட ஆந்திரா

ந்திர மாநிலம் அரசு கபூ சமூகத்தினர் மற்றும் இதர பொருளாதாரத்தில் நலிவடைந்தப் பிரிவினருக்கு வேலைவாய்ப்பில்  10%  இடஒதுக்கீடு  அளிப்பதாக அறிவித்துள்ளதாக  தி  இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மக்களின் வாழ்வாதாரத்தோடு இணைப்பது சட்டவிரோதம் – மணிப்பூர் உயர்நீதிமன்றம்

மேலும், இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பு (103 வது திருத்தம்)  சட்டம், 2019 ன் படி அறிவிக்கபட்டுள்ளதாகவும், இதன்படி அடிப்படை பணிகள் மற்றும்  சேவைப்பணிகளில்  இந்த  இடஒதுக்கீடு அளிக்கப்படும்  என்றும்  அறிவித்துள்ளதாக  அந்தச் செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட  எண்ணற்ற பொதுநல மனுக்கள் மற்றும் உயர்நீதிமன்றம் வழங்கிய  உத்தரவுகளுக்கு பின்னர்  இது குறித்த அறிவிப்பு  வெளியாகியுள்ளதாகவும் தி  இந்து  செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

‘இருமுறை மக்களவைக்கு அனுப்பிய தொகுதி மக்களை கைவிட்ட மோடி’ – அசாதுதீன் ஓவைசி

இதுகுறித்து அரசாணை வெளியிட்டுள்ள அம்மாநில தலைமை செயலாளர் , இ.டபிள்யு.எஸ் மற்றும்  பொதுப் பட்டியலின் கீழ் இடஒதுக்கீட்டு  உரிமைகள் அனுபவிக்காத  கபூ சமூகத்தினர் பயன்பெறும் வகையில்  இந்த  இடஒதுக்கீடு  வழங்கப்படுவதாக  குறிப்பிட்டுள்ளதாக அந்த  செய்தி  தெரிவிக்கிறது.

இந்த இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் பொருளாதாரத்தில் நலிவடைந்தப் பிரிவினருக்கான சான்றிதழ் பெற வேண்டுமெனவும்  தி இந்து செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்