Aran Sei

அசாமில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய இந்துக்களைத் தாக்கிய இந்துத்துவாவினர் – நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை உறுதி

சாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரில் உள்ள பிரஸ்பைடிரியன் தேவாலயத்தில், நேற்று(டிசம்பர் 25) இரவு நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கும்பல் ஒன்று அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தேவாலயத்திற்குள் நுழைந்த அக்கும்பல், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஆனால் இந்துக்கள் இங்கு இருக்க வேண்டிய தேவை இல்லை என்றும் கூறி, உடனடியாக தேவாலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் இணைந்த துளசி திவாஸ் என்ற இந்துக்களின் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. சில இந்துக்கள் துளசி திவாஸ் பண்டிகையில் பங்கேற்காமல்,  தேவாலயத்தில் இருந்ததால் அக்கும்பல் கோபமடைந்துள்ளது.

மாடுகள் நம்முடைய தாய் என கூறிய பிரதமர்: சாவர்கரின் புத்தகத்தை மேற்கோள்காட்டி திக்விஜய சிங் பதிலடி

காவி துண்டை கழுத்தில் சுற்றியிருந்த இளைஞர்கள், தேவாலயத்தை விட்டு இந்துக்கள் உடனே வெளியேற வேண்டும் என அங்கிருந்த கூட்டத்தினரை வற்புறுத்தியதோடு, ஒருவரை தாக்கியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து பேசியுள்ள கச்சார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராமன்தீப் கவுர், “கிறிஸ்தவர்களை தவிர, பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் தேவாலயத்தில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அதில் இந்துக்கள் பங்கேற்கக் கூடாது என்று அந்த கும்பல் கூறியிருக்கிறது. எங்களுக்கு இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிரான சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.

‘பரிசு கொடுத்து குழந்தைகளை மதம் மாற்றுகிறார்கள்’- உ.பி.யில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவ பொம்மைகளை எரித்த இந்துத்துவாவினர்

கடந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று கச்சார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீறினால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இந்துக்களுக்கு ஒரு வலதுசாரி அமைப்பு மிரட்டல் விடுத்ததை அடுத்து, கச்சார் நிர்வாகம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமை பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்